சி.பத்மநாதன். கொழும்பு 4: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1 காலி வீதி, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
பரத கண்டத்திற் குமாரக் கடவுள், வட இந்தியாவிற் குமாரக் கடவுள், இலங்கையிற் கந்த சுவாமி கோவில்கள் ஆகிய மூன்று இயல்களில் இச்சிறு பிரசுரம் எழுதப்பட்டுள்ளது. இலங்கையில் முருக வழிபாட்டின் தோற்றம் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டதெனக் கூறும் பேராசிரியர் சி.பத்மநாதன், அதனை பெருங்கற்காலப் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடைய நாகரே இலங்கையிற் பரப்பினார்கள் என்கிறார். தமிழில் பெயர் எழுதப்பட்ட வேலின் வடிவம் இங்கு கிடைத்துள்ளதாகவும், இருபது நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மயிலின் உருவம் கீரிமலையிற் கிடைத்ததாகவும் குறிப்பிடுகிறார்.