ச.குமாரசுவாமிக் குருக்கள். திருக்கேதீச்சரம்: சிவானந்த குருகுலம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1962. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம்).
(4), 14 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.
சிவானந்த குருகுல வெளியீட்டு வரிசையில் இந்நூல் முதலாவதாக வெளிவந்துள்ளது.
சிவானந்த குருகுலம்: திருக்கேதீச்சரம் பற்றி சம்பந்தன் அவர்களின் அறிமுக உரையுடன், பதிப்புரை (கந்தையா வைத்தியநாதன்), முகவுரை (ச. குமாரசுவாமிக் குருக்கள்) ஆகியவற்றுடனும்; சைவக்கிரியைகளில் பயன்படுத்தப்பெறும் பல்வேறு முத்திராலட்சணங்களையும் இந்நூல் விளக்குகின்றது. முத்திரா லட்சணம், சிகா முத்திரை, நமஸ்கார முத்திரை, சண்முக முத்திரை, கும்ப முத்திரை, தேனு முத்திரை, மகா முத்திரை, அங்குச முத்திரை, விஸ்புர முத்திரை, கோவிஷாண முத்திரை, திராசனி முத்திரை, ஆவாகன முத்திரை, ஸ்தாபன முத்திரை, சன்னிதான முத்திரை, சன்னிரோதன முத்திரை, பத்ம முத்திரை, விம்ப முத்திரை, சங்கார முத்திரை, சோடிகா முத்திரை, பதாகை முத்திரை, சங்க முத்திரை, காளகர்ணிகை முத்திரை, இலிங்க முத்திரை, மனோரத முத்திரை சங்க முத்திரை, பஞ்சமுக முத்திரை, திரிசூல முத்திரை, மகர முத்திரை, சிருக்கு முத்திரை, நாராச முத்திரை, திவ்விய முத்திரை, உற்பவ முத்திரை, தியாக முத்திரை, நீரீக்ஷண முத்திரை, புரோக்ஷண முத்திரை, தாடன முத்திரை, அப்யுக்ஷண முத்திரை, தாளத்திரயம், நேத்திர முத்திரை, பரிக முத்திரை, மிருக முத்திரை, ஹம்ச முத்திரை, சூகரீ முத்திரை, கோமுக முத்திரை, நிரோதன முத்திரை, சின்மய முத்திரை, யோக முத்திரை, பஸ்ம முத்திரை, திரு முத்திரை, சபா முத்திரை, பணா முத்திரை, கண்டி முத்திரை, வியாபகாஞ்சலி முத்திரை, பரிகை முத்திரை ஆகிய 52 வகை முத்திரைகளைப் பற்றிய விவரணங்கள் கொண்ட தனித்தனிச் செய்யுட்களையும் தந்து அதன் எளியவடிவிலான பொழிப்புரைகளையும் எழுதிவழங்கியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2976).