மூ.சிவலிங்கம். யாழ்ப்பாணம்: சைவத் திருநெறிக் கழகம், இணுவில், 1வது பதிப்பு, 2017. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில் கிழக்கு, இணுவில்).
xxii, 117 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-44538-2-1.
சைவத்தமிழ் மக்கள் முதலில் வணங்கும் தெய்வமான விநாயகப் பெருமானின் திருவருளை 41 தலைப்புகளில் கட்டுரைகளாகத் தொகுத்துத் தந்திருக்கிறார். இது ஆசிரியரின் 21ஆவது நூலாகும். வக்கிரதுண்ட விநாயகர், பிரம்மனின் படைத்தல் ஆரம்பம், விநாயகரின் பெருமை, சிவபெருமானின் தேர் அச்சினை உடைத்த விநாயகர், ஆதிசேடன் ஆயிரம் தலைகளைப் பெற்ற கதை, இராவணன் அந்தணச் சிறுவனைக் குட்டிய கதை, கோபத்தால் விளைந்த விபரீதங்களும் விநாயகரின் விசித்திரப் பூசையும், அனலாசூரன் கதையும் அறுகு அர்ச்சனையின் பெருமையும், கணேசர் காக்கையாக வந்த கதை, மமதை கொண்ட மன்னனும் மமதையை அடக்கிய மறையோனும், அறுகம்புல்லின் மகிமையும் ஏழையான வேதியரின் உபசரிப்பும், அறுகம்புல்லுக்கு ஈடு தேடிய கதை, வன்னி இலையால் பெருவாழ்வு பெற்ற கதை, இளம் தம்பதியரின் ஏளனச் சிரிப்பின் விளைவு, அங்காரக விநாயகமூர்த்தி பூசைகள் செய்த கார்த்தவீரியன், பரசுராமனின் சபதம், அங்காரகன் (செவ்வாய்) அவதாரம், சந்திரன் சிரித்த கதை, முருகப்பெருமான் அமைத்த மயூரேசம், பிரளயம் காத்த விநாயகர், வரம் தருவார் வலஞ்சுழி விநாயகர், சங்கடஹரசதுர்த்தி விரதம், புருசுண்டி முனிவர், விநாயகர் சுலோக விளக்கம், பாரதம் எழுதிய பானை வயிற்றோன், லீலாகாண்டம்-வக்கிரதுண்ட விநாயகரின் அவதாரம், சிந்தாமணி விநாயகர், கஜானனர் லீலையும் சிந்தூரன் கால ரூபிக் கதைகளும், மூஷிக வாகனரும் விக்கினராஜனின் விளையாடலும், மயூரேச விநாயகர் அவதாரமும் கமலாசுரன் வதமும், சிந்தராசன் பெற்ற வரமும் பாலவிநாயகர் அவதாரமும், மயூரேசரின் திருவிளையாடல்களும் சிந்தராசனின் போராட்டமும், தூமகேது விநாயகரின் அவதாரக் கதை, கணேசர் அவதாரம், கணபதி அவதாரமும் கஜமுகாசுரன் கதையும், மகோற்கட விநாயகர் அவதாரமும் திருவிளையாடல்களும், உடுண்டி விநாயகர் அவதாரம், வல்லபை விநாயகரின் அவதாரமும் வல்லபை தேவியின் திருமணமும், ஒளவையார், ஒளவை செந்தமிழில் பாடிய விநாயகர் அகவல், நம்பியாண்டார் நம்பி, அருணகிரிநாதர் திருப்புகழ், மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62081).