நா.முருகையா. ஏழாலை: ஆத்மஜோதி தியான மணிமண்டபம், 1வது பதிப்பு, 2018. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்டர்ஸ், பலாலி வீதி).
48 பக்கம், விலை: ரூபா 80., அளவு: 20.5×15 சமீ.
சுன்னாகம் ஊரெழு கிழக்கைச் சேர்ந்த திருமுறை வித்தகர் திரு.நா.முருகையா அவர்கள் இந்நூலில் சூரிய வழிபாடு பற்றிய பல்வேறு தகவல்களைத் திரட்டித் தந்துள்ளார். சிவபூஜையில் சூரியன், அடியார்களின் பூஜையில் சூரியன், சூரிய அஷ்டோத்திரம், சூரியனார் கோவில், சூரியனின் சிறப்பம்சங்கள், சூரிய அருளால் கிடைப்பது, சூரிய நமஸ்கார மந்திரங்கள்,வருடப்பிறப்பில் சூரியன், சூரியனை தரிசனம் செய்தல், ஞாயிறில் ஞாயிறு வழிபாடு, தைப்பொங்கல் சூரியன், நலம்தரும் ஞாயிறு விரதம் ஆகிய தலைப்புகளில் இத்தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.