13120 இந்து சமய பாடம்.

க.சொக்கலிங்கம் (புனைபெயர்: சொக்கன்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1979. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 50, கண்டி வீதி).

(8), 221 பக்கம், விலை: ரூபா 8.50, அளவு: 21×13 சமீ.

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரத்தில் பயிலும் மாணவர்களுக்கான இந்து சமய பாட நூல். தரம் 9-1979 தொடக்கம், தரம் 10- 1980 தொடக்கம் பயன்படுத்தப்படும் பாடவிதானத்திற்கு அமைவாக எழுதப்பட்டுள்ளது. எமது சமயம், வாழ்க்கையில் சைவநெறி, அடியார் கண்ட அன்பு நெறி, ஈழத்து மெய்ஞ்ஞான பரம்பரை, சமய இலக்கியம், சண்மதம், திருமுறைப்பாடல்கள், பின் எழுந்த தோத்திரப் பாடல்கள் ஆகியன இந்நூலில் பாடங்களாக வகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 04192).

ஏனைய பதிவுகள்