பொன். முத்துக்குமாரன், ச.பஞ்சாட்சர சர்மா. யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, 226, காங்கேசன்துறை வீதி, 11ஆவது பதிப்பு, தை 1964, 1வது பதிப்பு, ஆடி 1950, 7வது (திருத்திய) பதிப்பு, ஆனி 1959. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி).
199 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 3.50, அளவு: 21×13.5 சமீ.
யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா வித்தியாலய ஆசிரியர் வித்துவான் பொன். முத்துக்குமாரனும், புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரி ஆசிரியர் பண்டிதர் ச.பஞ்சாட்சர சர்மாவும் இணைந்து வெளியிட்டுள்ள சைவ சமய பாடநூல். மாதிரி வினாக்கள், விடைகள், அட்டவணைகள் முதலியனவும் அடங்கியது. முதலாம் பகுதியில் இந்து சமய சாத்திரங்கள், இப்பொழுது இந்து சமயத்திலுள்ள வெவ்வேறு பிரிவுகள், சமயப் பெரியாரின் பெயரும் அவர்கள் அருளிய நூல்களும், நீதி நூல் (திருக்குறள் அதிகாரம் 1-4) ஆகிய பாடங்களும், இரண்டாம் பகுதியில் சைவ சித்தாந்த நூல்கள், சைவ சித்தாந்தக் கோட்பாடுகள், சைவ சித்தாந்த சாதனைகள், சைவசமயப் பெரியார் வரலாறு ஆகிய பாடங்களும் இடம்பெற்றுள்ளன. அனுபந்தங்களாக சில தொகைகளின் விளக்கம், சமயாசாரியர் அற்புதங்கள், கால ஆராய்ச்சிக் குறிப்புகள், பயிற்சி வினாக்கள், மாதிரி விடைகள், சமய குரவர் சந்தான குரவர் அட்டவணை ஆகியவை தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38638).