13126 சைவ நெறி-8ஆம் தரம்.

பா.லக்ஷ்மணன், இ.பரமேஸ்வரன், வை.கா.சிவப்பிரகாசம், ந.சண்முகரத்தினம் (ஆசிரியர்கள்). கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, 1978. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்).

(6), 140 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.

ஜனார்த்தனன் இரத்தினசபாபதி, மா.செல்வகுருநாதன் ஆகியோரின் ஓவியங்களும் விளக்கப்படங்களும் இந்நூலின் பாடம் பற்றிய விளக்கத்தை அதிகரிக்க உதவுகின்றன. இந்நூலின் பதிப்பாசிரியராக சைவப்புலவர் ந.சண்முகரத்தினம் பணியாற்றியிருந்தார். இந்நூல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான சைவசமயம் (வரலாறு, பன்னிரு திருமுறைகள், சாத்திரங்கள், சமயத் தத்துவங்கள்), வாழ்க்கையிற் சைவநெறி (இந்து இல்லம், சைவநாற்பாதங்கள், சக்தி விரதம்), பெரிய புராணங் கண்ட மெய்யடியார்கள், மெய்கண்ட சந்தானம், காலந்தோறும் மெய்யடியார்கள், தமிழ் வேதம் (மூவர் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருமந்திரம், பெரியபுராணம்), பொது அறிவு ஆகிய பாடப்பரப்புகளை உள்ளடக்கி வெளிவந்துள்ளது. அனுபந்தமாக இந்து சமயப் பழக்க வழக்கங்கள், பௌத்த சமயப் பழக்கவழக்கங்கள், முஸ்லிம் பழக்க வழக்கங்கள், கிறிஸ்தவ சமயப் பழக்கவழக்கங்கள் என்பன இணைக்கப்பட்டுள்ளன.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 04189).

ஏனைய பதிவுகள்