நூல் வெளியீட்டுக் குழு. கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, 2014. (தெல்கொட: சென்வின் தனியார் நிறுவன அச்சகம், இல. 35/3, கேரகல பாதை, ஹெலும்மஹர).
xii, 179 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ.
பத்தாம் தரத்தில் சைவ சமயம் பயிலும் மாணவர்களின் பாடநூல் தேவைகளுக்காகத் தயாரிக்கப்பட்ட சைவ சமய நூல் இது. பரம்பொருள், இறைச் சிந்தனைகள், சைவ விழுமியங்கள், பஞ்சாங்கம், விரதங்கள், தீபாவளிப் பண்டிகை, திருமணச்சடங்கு, வேதமும் ஆகமமும், திருமுறைகள், திருக்கூட்டச் சிறப்பு, திலகவதியார், மகோற்சவம், சமய குரவர் நால்வர், சந்தான குரவர், திருமூலர், சுவாமி விவேகானந்தர், இறைவனும் ஆன்மாவும், திருவருட்பயன், குருலிங்க சங்கம வழிபாடு, நாட்டார் தெய்வங்கள், நாட்டார் கலைகள், இலங்கை சைவ மரபின் தொன்மையை விபரிக்கும் இதிகாசங்கள், இலங்கையிலுள்ள சைவ ஆலயங்கள், இலங்கைச் சைவ சமய நுல்கள், இலங்கைச் சைவ சமய நிறுவனங்கள், சரியைத் தொண்டுகள், சைவ தர்மம் ஆகிய 27 பாடங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62768).