13130 சைவ போதினி-ஏழாம் வகுப்பு.

விவேகானந்த சபை. கொழும்பு: விவேகானந்த சபை, திருத்திய பதிப்பு, 1976. (நாவலப்பிட்டி: ஸ்ரீ ஆத்மஜோதி அச்சகம்).

(4), 130+10 பக்கம், விலை: ரூபா 3.00, அளவு: 18×12.5 சமீ.

விவேகானந்த சபையினர் தாங்கள் அகில இலங்கை அடிப்படையில் ஆண்டுதோறும் நடத்திவரும் சைவ சமய பாடப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குப் பயனுற வேண்டியும், இலங்கை அரசாங்க கல்வித்திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாகவும் இந்நூல் எழுதப்பட்டது. திருக்கோயில் வழிபாடு, சரியைத் தொண்டு, சைவக் கிரியைகள், திருக்கோணேஸ்வரம், பொன்னம்பலவாணேஸ்வரம், விநாயக விரதம், மெய்ப்பொருள் நாயனார், குங்குலியக் கலய நாயனார், சேக்கிழார் சுவாமிகள், கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள், ஞானப்பிரகாச முனிவர், நாவலர் பெருமான், திருவருட்பாக்கள், பாடல்களின் தல வரலாறு, திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம், பட்டினத்துப் பிள்ளையார் பாடல், திருப்புகழ், திருக்குறள், சிவயோக சுவாமிகள், சைவதத்துவம் ஆகிய 22 பாடங்கள் இந்நூலில் இ;ம்பெறுகின்றன. அநுபந்தமாக இராமகிருஷ்ண பரமஹம்சர், மாதிரி வினாக்கள் ஆகியன இணைக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 45967).

ஏனைய பதிவுகள்