க.சபாரெத்தினம், சொ.பிரசாத் (தொகுப்பாசிரியர்கள்). மட்டக்களப்பு: மறுகா, ஆரையம்பதி 3, 1வது பதிப்பு, மாசி 2017.
(அக்கரைப்பற்று-01: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்ட்).
x, 106 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-38041-0-5.
கண்ணகை வழிபாடு, கண்ணகையின் முற்பிறப்பு பற்றிய கதைகள், மாங்கனிக் கதை, எண்ணெய் வாணிபர் கதை ஆகிய அறிமுகக் குறிப்புகளைத் தொடர்ந்து, கடல்சூழ் இலங்கை கண்ணகை வழிபாடு, ஆலய அமைவிடமும் அமைப்பும், சடங்குகள், அருள்மாட்சியும் தேவியின் அற்புதங்களும், காவியங்கள் கவசங்கள் மற்றும் பாடல்கள், ஆகிய இயல்களின் வழியாக, விரிவாக ஆரையம்பதியில் எழுந்தருளியிருக்கும் கண்ணகை அம்மன் கோவில் பற்றிய வரலாற்றுத் தகவல்களும், வழிபாட்டு முறைகளும் விளக்கப்பட்டுள்ளன. பின்னிணைப்புகளாக அம்மனின் வரலாற்றில் சம்பந்தப்படும் ஆலயங்கள் மற்றும் இடங்கள் குறித்த வரைபடம், புகைப்படங்கள், என்பனவும் தரப்பட்டுள்ளன.