13133 இணுவையூர் அருள்மிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோயில்.

மூ.சிவலிங்கம் (மலராசிரியர்). இணுவில்: சைவநெறிக் கூடம், இணுவில் மையம், 1வது பதிப்பு, ஜுலை 2017. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில் கிழக்கு, இணுவில்).

xiv, 118 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 24×17 சமீ.

கலாபூஷணம் மூ.சிவலிங்கம் 2003இல் தனது எழுபதாவது வயதில் எழுத்துலகில் கால் பதித்தவர். 84ஆவது வயதில் அவரது 23ஆவது நூலாக இவ்வாலய வரலாறு வெளியிடப்படுகிறது. திருக்கோவில் அமைவிடம், அன்பே சிவம் என்னும் இறையருட் சிறப்பு, தமிழ் வேத ஆகமங்களின் தோற்றம், சிவபூமியான இலங்கையின் புராதன சிவாலயங்கள், ஞானலிங்கேச்சுரர் ஆலய வளாகத்தில் முன்தோன்றிய ஞானவைரவர், ஞானலிங்கேச்சுரர் ஆலய அமைவில் சசிக்குமாரை இணைத்த இறையருட் சித்தம், இறைபணியில் சைவநெறிக் கூடமும் அதன் சிறப்புகளும், சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் அவர்களின் தாயக மண்ணின் பணிகள், ஈழத்தில் முதன்முதல் தெய்வத் தமிழில் நன்னீராட்டு விழா நடந்த இணுவில் அருள்ஞானமிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோயில், அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோயில் அமைப்பு, தெய்வத்தமிழில் நடைபெற்ற ஞானலிங்கேச்சுரர்  நன்னீராட்டு விழா 10.7.2016, ஞானலிங்கேச்சுரர்  திருக்கோயிலின் பூசை வழிபாட்டு ஒழுங்குகள், நடராஜரின் திருவுருவத் தத்துவங்களும் அணு விஞ்ஞானமும் சக்தியின் சிறப்பும், சிவனடியார்களான தொண்டர்களின் பெருமை, தெய்வத் தமிழான பன்னிரு திருமுறைகள், அற்புதங்கள் செய்த சிவசின்னமாம் திருநீறு, இணுவில் மண்ணின் பெருமையை உலகறியச் செய்த சசிக்குமார், இணுவில் ஞானலிங்கேச்சுரர் ஆலய வளர்ச்சியில் எதிர்காலச் செயற்திட்டங்கள், இவ்வாலய வளர்ச்சியில் தொண்டர்களும் பணியாளர்களும், இணுவில் வரலாற்றில் ஞானிகளின் வகிபாகம், நிறைவாக ஆகிய 21 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62074).

ஏனைய பதிவுகள்