13138 சரவணை பள்ளம்புலம் அருள்மிகு முருகமூர்த்தி திருக்கோவில் ஓர் வரலாற்றுப் பார்வை.

ச.மகாலிங்கம். சரவணை: ச.மகாலிங்கம், பள்ளம்புலம், சரவணை கிழக்கு, 1வது பதிப்பு, 2008. (கொழும்பு 6: விகடன் அச்சகம், 541/2சீ, காலி வீதி, வெள்ளவத்தை).

68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.

சரவணை பள்ளம்புலம் அருள்மிகு முருகமூர்த்தி திருக்கோவிலின் வரலாறு இந்நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. முருக வழிபாடு, ஆலய அமைவிடம், ஆலயத்தின் தோற்றுவாய், ஆலயச் சிறப்பும் அருள்பாலிப்பும், அறங்காவலர் நிர்வாகம், பக்திப் பாமாலைகள் (சரவணையூர் திரு.ஆ.தில்லைநாதப் புலவர்), முருக பக்தர் திரு.வே.சுப்பிரமணியம், அறங்காவல் சபை நிர்வாகம் ஆரம்பம், 1964இல் ஓர் மறுமலர்ச்சி, பள்ளம்புலம் ஸ்ரீமுருகன் கூட்டுப்பிரார்த்தனைச் சபை, ஆலயப் பூசையில் அந்தணர் வரிசை, கோயிற் காணிகள், கோயில் ஆதன அட்டவணை, 1990இல் போரும் புலம்பெயர்தலும், 1997ஆம் ஆண்டுக்குப் பின், பள்ளம்புலம் முருகன் மீது பக்திப் பாமாலைகள் (சரவணையூர் ஆ.தில்லைநாதப் புலவர், தி.ஸ்ரீகந்தராசா, வெ.இராசலிங்கம், முருகதாஸ், தில்லைச்சிவன்), முருக நாமாவளி, ஆலய விழாக்கள் பற்றிய விபரங்கள், ஆலயத்தின் முக்கிய நிகழ்வுகள் சில ஆகிய அத்தியாயங்களின்கீழ் இவ்வரலாற்றுத் தகவல்களும் கோவில் சார்ந்த இலக்கியங்களும் வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளன.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48146).

ஏனைய பதிவுகள்