நயினை நா.யோகநாதன் (தொகுப்பாசிரியர்). திருக்கேதீச்சரம்: மு.ஞானப்பிரகாசம், தலைவர், திருக்கேதீச்சர ஆலய திருப்பணிச் சபை, 1வது பதிப்பு, பெப்ரவரி 1990. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம்).
(4), 44 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×12.5 சமீ.
திருக்கேதீச்சரத் திருத்தலத்தின் புராதன வரலாறும் புதிய வரலாறும் உள்ளடங்கிய இந்நூல் திருக்கேதீச்சர ஆலய திருப்பணிச் சபையின் அனுசரணையுடன் முகாமைக் குழுவின் சார்பில் 23.2.1990 அன்று சிவராத்திரி தினத்தையொட்டி வெளியிடப்பட்டது. வரலாற்றுச் செய்திகள், மறைந்திருக்கும் சரித்திரம், அகழ்வாராய்ச்சி, பாலாவி ஆறு, துறைமுகச் சிறப்பு, பழைய ஆலயச் சுற்றாடல், ஆலயம் சிதைவுறல், இருள்சூழ்ந்த காலம், நாவலர் நினைவு, காணி பெறல், நகரத்தார் பணி, திருக்கேதீஸ்வர புனருத்தாரணம், நிர்வாக அமைப்பு, முகாமைக்குழு உதயம், பாடல் பெற்ற சிறப்பு, எதிர்காலத் திருப்பணி, மூலமூர்த்திச் சிறப்பு, தல விசேடம், தீர்த்த விசேடம், கோமாதா பூசை, திருமறைப்பூசை, தற்போதுள்ள திருக்கோயில் அமைப்பும் சுற்றாடலும் ஆகிய தலைப்புகளில் திருக்கேதீச்சரத் திருத்தலத்தின் புராதன வரலாறும் புதிய வரலாறும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து திருஞானசம்பந்த நாயனார் அருளிச்செய்த திருக்கேதீச்சரத் தேவாரத் திருப்பதிகம், சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச்செய்த திருக்கேதீச்சரத் தேவாரத் திருப்பதிகம், ஸ்ரீ லிங்காஷ்டகம், மாணிக்கவாசகப் பெருமான் அருளிச்செய்த சிவபுராணம், திருக்கேதீச்சரத் தோத்திரம் ஆகிய பக்தி இலக்கியங்களும் தொகுக்கப்பெற்றுள்ளன.