13140 திருக்கேதீச்சர திருத்தல வரலாறும் தேவார, திருப்பதிகங்களும்.

நயினை நா.யோகநாதன் (தொகுப்பாசிரியர்). திருக்கேதீச்சரம்: மு.ஞானப்பிரகாசம், தலைவர், திருக்கேதீச்சர ஆலய திருப்பணிச் சபை, 1வது பதிப்பு, பெப்ரவரி 1990. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம்).

(4), 44 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×12.5 சமீ.

திருக்கேதீச்சரத் திருத்தலத்தின் புராதன வரலாறும் புதிய வரலாறும் உள்ளடங்கிய இந்நூல் திருக்கேதீச்சர ஆலய திருப்பணிச் சபையின் அனுசரணையுடன் முகாமைக் குழுவின் சார்பில் 23.2.1990 அன்று சிவராத்திரி தினத்தையொட்டி வெளியிடப்பட்டது. வரலாற்றுச் செய்திகள், மறைந்திருக்கும் சரித்திரம், அகழ்வாராய்ச்சி, பாலாவி ஆறு, துறைமுகச் சிறப்பு, பழைய ஆலயச் சுற்றாடல், ஆலயம் சிதைவுறல், இருள்சூழ்ந்த காலம்,  நாவலர் நினைவு, காணி பெறல், நகரத்தார் பணி, திருக்கேதீஸ்வர புனருத்தாரணம், நிர்வாக அமைப்பு, முகாமைக்குழு உதயம், பாடல் பெற்ற சிறப்பு, எதிர்காலத் திருப்பணி, மூலமூர்த்திச் சிறப்பு,  தல விசேடம்,  தீர்த்த விசேடம், கோமாதா பூசை, திருமறைப்பூசை,  தற்போதுள்ள திருக்கோயில் அமைப்பும் சுற்றாடலும் ஆகிய தலைப்புகளில் திருக்கேதீச்சரத் திருத்தலத்தின் புராதன வரலாறும் புதிய வரலாறும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து திருஞானசம்பந்த நாயனார் அருளிச்செய்த திருக்கேதீச்சரத் தேவாரத் திருப்பதிகம், சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச்செய்த திருக்கேதீச்சரத் தேவாரத் திருப்பதிகம், ஸ்ரீ லிங்காஷ்டகம், மாணிக்கவாசகப் பெருமான் அருளிச்செய்த சிவபுராணம், திருக்கேதீச்சரத் தோத்திரம் ஆகிய பக்தி இலக்கியங்களும் தொகுக்கப்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

11259 ஸ்ரீதேவி கருமாரி அம்மன் அந்தாதி மாலை.

நீர்கொழும்பு ந.தருமலிங்கம். நீர்கொழும்பு: ந.தருமலிங்கம், 195, கடற்கரை வீதி, 1வது பதிப்பு, மார்கழி 2000. (கொழும்பு 13:  லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு). 80 பக்கம், விலை: ரூபா 90., அளவு: 18×12

15778 செவ்வாயில் அகதிகள்: விஞ்ஞானப் புனைகதை.

எம்.எஸ்.எம். ஜிப்ரி. பொல்கஹவெல:  எம்.எஸ்.எம்.ஜிப்ரி. 58/3 எஸ். எம். சுபியான் மாவத்தை, பண்டாவ, 1வது பதிப்பு, 2015. (பொல்கஹவெல: ஏ.பீ.சீ. பிரின்டர்ஸ்). 100 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22×16 சமீ., ISBN: