ச.கு.வைத்தீசுவரக் குருக்கள். வேலணை: திருஞானசம்பந்தர் மடாலய பரிபாலனசபை, 1வது பதிப்பு, கார்த்திகை 1970. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச அச்சியந்திரசாலை).
xx, 56 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
திருக்கேதீச்சரப் புராணத்தைப் பாடியவர் அச்சுவேலி சிவஸ்ரீ ச.குமாரசுவாமிக் குருக்களின் புதல்வராகிய கு.வைத்தீஸ்வரக் குருக்களாவார். இந்நூலில் திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் தேவாரத் திருப்பதிகம், சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரத் திருப்பதிகம், ஆகியவற்றுடன் திருக்கேதீச்சரப் புராணமும் இடம்பெறுகின்றது. இப்புராணமானது, முதலாவது இலங்கைச் சிறப்புரைத்த சருக்கம், கிரித்திரய வரலாற்றுச் சருக்கம், திருத்தல விசேட சருக்கம், கேது பூசனைச் சருக்கம், மகாதுவட்டா திருப்பணி செய்த சருக்கம், ஸ்ரீராமர் சிவபூசைச் சருக்கம், திருமணச் சருக்கம், அகத்திய முனிவர் பூசனைச் சருக்கம், ஆகியவற்றுடன் இறுதியில் அருஞ்சொற் பொருள் விளக்கமும் தரப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 02988).