13145 நயினை மான்மியம் மகா காவியம்: தெளிவுரையுடன்.

நயினை நாகமணிப் புலவர் (மூலம்), நயினை-நல்லூர் சரவணமுத்து செல்வத்துரை (உரையாசிரியர்). கனடா: நயினை நல்லை பதிப்பகம், ரொறன்ரோ, 1வது பதிப்பு, 2013. (செலாங்கூர் 68100: சம்பூர்ணா அச்சகம், Lot 4, Block A, Jalan Perusahaan Satu,  Batu Caves Industrial Estate).

lxiv, 709 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15.5 சமீ., ISBN: 978-0-9918775-0-8.

நயினை மான்மியம், 1880-1933 காலப்பகுதியில் வாழ்ந்த நயினை நாகமணிப் புலவர் இயற்றிய காவியமாகும். இவரது மற்றொரு நூல் நயினை நீரோட்ட யமகவந்தாதி என்ற பிரபந்தமாகும். பாட்டியல் நூல்கள் கூறும் பிரபந்த முறையிலமைந்த நயினை மான்மியம், 17 சருக்கங்களைக் கொண்டது. விருத்த யாப்பிலே அவை எடுத்துரைக்கப்பட்டிருந்தன. முதல் ஏழு சருக்கங்கள் நயினாதீவுடன் நேரடித் தொடர்புடையனவாகவும், பின்னை பத்து சருக்கங்களும் சிலப்பதிகாரம், கோவலனார் கதை, மணிமேகலை ஆகிய பேரிலக்கியங்களின் மறுவாசிப்புகளாகவும் உள்ளன. இந்நூலுக்கு தெளிவுரையை சரவணமுத்து செல்லையா அவர்கள் வழங்கியுள்ளார். கடவுள் வாழ்த்துச் சருக்கம், ஈழமண்டலச் சருக்கம், தல விசேடச் சருக்கம், மூர்த்தி விசேடச் சருக்கம், தீர்த்த விசேடச் சருக்கம், விழாவணிச் சருக்கம், சேடன் அருச்சனைச் சருக்கம், மகாமணிச் சருக்கம், புகார்ச் சருக்கம், உவவனச் சருக்கம், மணிபல்லவச் சருக்கம், பீடிகைச் சருக்கம், நாகர்வாதச் சருக்கம், பாத்திரச் சருக்கம், ஆபுத்திரச் சருக்கம், ஊர் அம்பலச் சருக்கம், புண்ணியராச தரிசனைச் சருக்கம், இரங்கல் உரை ஆகிய இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்புகளாக புலவரின் தனிப்பாடல், மணித்தீப மகத்துவச் சருக்கம், மணித்துவீப வர்ணனம், திருக்கோயிற் சருக்கம், பதிவேட்டில் மான்மியம், மான்மியம்- காலம், பதிவேட்டில் தனியன்கள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

How to Automate Law Firm Processes

Automation of business processes is among the most popular technologies utilized by businesses that wish to increase their efficiency and efficiency. Business leaders are often