13149 பண்டைய மட்டக்களப்பும் சங்கமன்கண்டி இறக்காவில் சிவாலயமும் (ஆய்வு).

நா.நவநாயக மூர்த்தி. அக்கரைப்பற்று (கி.மா): வானதி பவனம், பனங்காடு, 1வது பதிப்பு, ஆடி 2017. (அக்கரைப்பற்று: மல்ட்டி ஓப்செட்).

xviii, 128 பக்கம், விலை: ரூபா 400, அளவு: 21×14.5 சமீ.

பண்டைய மட்டக்களப்பு/மகாவம்சம் கூறும் ஏரகாவில் என்ற சங்கமன்கண்டி இறக்காவில்/இறக்காவில் கிராமம் சிவாலயம் தோற்றம்/பௌத்தம் அறிமுகம்/ தமிழ் மன்னர்கள் சேனன்,கூத்திகன் எல்லாளன் காலத்தில்/துட்டகாமினி மன்னன் காலம் தொடக்கம் தமிழ் மன்னர்கள் ஆட்சிக் காலம் வரை (கி.மு.101-29 வரை)/மட்டக்களப்பில் தமிழர் ஆட்சியும் இலங்கை அரசியல் நிலையும் (கி.மு.29ஆம் ஆண்டு தொடக்கம் மகாசேனன் காலம் வரை)/கி.பி. முதலாம் இரண்டாம் நூற்றாண்டுகளில்/கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் மட்டக்களப்பும் சங்கமன்கண்டி இறக்காவில் சிவாலயமும்/கி.பி. நாலாம் நூற்றாண்டில் சங்கமன் கண்டி இறக்காவில் சிவாலயம்/கி.பி.நாலாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மட்டக்களப்பு ஆகிய 11 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. தம்பிலுவில் பழம்பதியில்  நாட்டுக்கூத்துக் கலைஞர் நாகமுத்து-சீவரெத்தினம் தம்பதியினரின் மகனாகப் பிறந்தவர் நவநாயகமூர்த்தி. கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருவதுடன் நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். பண்டைய ஈழத்தமிழர், திருக்கோவில் பிரதேச இலக்கிய வரலாறு, தம்பிலுவில் கண்ணகை வரலாறு முதலான ஆய்வு நூல்களின் ஆசிரியரான இவரது ஒன்பதாவது நூல் இது.

ஏனைய பதிவுகள்