சண்முகலிங்கம் சஜீலன். தெல்லிப்பழை: பன்னாலையம்பதி திருஷீச்சரம்பதி கோவில், 1வது பதிப்பு, 2017. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்டர்ஸ், பலாலி வீதி).
60 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ.
திருஷீச்சரம் அமரர் சிவஸ்ரீ முத்துச்சாமிக் குருக்கள் சீதாலஷ்மி அம்மா (17.02.1942-06.01.2017) அவர்களின் அன்னை தர்மாதிகர்த்தா நினைவாலயம் வருஷாதிகம் 26.12.2017 இல் நிகழ்த்தப்பட்ட வேளையில் வெளியிடப்பட்ட நினைவு மலர். இம்மலரில் திருமுறைகளுடன், அமரர் சிவஸ்ரீ முத்துச்சாமிக் குருக்கள் சீதாலஷ்மி அம்மா அவர்களின் வாழ்வியல் பற்றிய கட்டுரையொன்றும், திருஷீச்சரம் மான்மியம், திருவருள்மிகு ஸ்ரீ பாலலுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 08.09.2016 பற்றிய செய்தியறிக்கையும், திருஷீச்சரம் தெய்வீகப்பதி ஸ்ரீபாலசுப்ரமண்ய சுவாமி திருக்கோவில் அறப்பணி பூர்வீகம் பற்றிய கட்டுரையும், ஆலய வரலாறு, இன்னோரன்ன கோவில் சார்ந்த தகவல்களையும் உள்ளடக்கியதாக இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது.