சண்முகலிங்கம் சஜீலன். யாழ்ப்பாணம்: பிரான்பற்று பெரியவளவு ஆலம்பதி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம், பிரான்பற்று, பண்டத்தரிப்பு, 1வது பதிப்பு, 2018. (ஊரெழு: சிறீலக்ஷ்மி பிறின்டர்ஸ், பலாலி வீதி).
16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
கிராமங்களில் அமைந்துள்ள ஆலயங்களின் வரலாறுகளைத் தேடிப் பதிவுசெய்வதன் மூலம் அவ்வூர் பிரதேச வரலாறு, அப்பிரதேச மக்களின் மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு, போன்றவற்றையும் ஆவணப்படுத்த முடிகின்றது. இத்தகையதொரு அரிய முயற்சி இச்சிறு பிரசுரத்தின் வாயிலாக நடைபெற்றுள்ளது. பண்டத்தரிப்பிலுள்ள பிரான்பற்று பெரியவளவு ஆலம்பதி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம் பற்றிய தரவுகளை இச்சிறுநூல் கொண்டுள்ளது. அன்னையின் அருள், யாழ்ப்பாணத்து மாரியம்மன் கோவில்கள், பிரான்பற்று பெரியவளவு ஆலம்பதி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம்: சில வரலாற்றுக் குறிப்புகள், தேர் ஓர் ஆலயம் ஆகிய உபதலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.