சி.கணபதிப்பிள்ளை. மட்டக்களப்பு: சி.கணபதிப்பிள்ளை, அட்டப்பள்ளம், 1வது பதிப்பு, 1979. (யாழ்ப்பாணம்: விபுலாநந்த அச்சகம்).
52 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.
இந்நூலில் இலங்கையின் மிகப்பழமையான கிழக்கிலங்கைத்; திருத்தலங்கள் பற்றிய விளக்கக் கட்டுரைகள், தலங்களின்மேற் பாடப்பெற்ற பதிகங்கள் என்பன இடம்பெற்றுள்ளன. கதிர்காமம், கதிரமலை, கோணேஸ்வரம், தான்தோன்றியீசுபரம், போரைதீவு சித்திரவேலாயுதசுவாமி கோவில், வெருகலம்பதி, திருக்கோவில் விரிவுரை, சித்திரவேலாயுதசுவாமி நவமணிமாலை, சித்திரவேலாயுதசுவாமி திருவூஞ்சற் பாடல், சித்திரவேலாயுதர் திருக்கோவில் திருப்பதிகம் ஆகிய பத்து தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இளைப்பாறிய தலைமை ஆசிரியரும் சோதிடருமான சி.கணபதிப்பிள்ளை அவர்கள் மட்டக்களப்பு அட்டப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர். கோவில் பட்டயங்கள், ஏடுகள், பழைய நூல்களில் காணப்பட்ட குறிப்புகளின் அடிப்படையில் இந்நூலை ஆக்கியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10960).