வை.அநவரத விநாயகமூர்த்தி. யாழ்ப்பாணம்: ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, டிசம்பர் 1994. (யாழ்ப்பாணம்: அபிநயா பதிப்பகம், 65/1, நாயன்மார் வீதி, நல்லூர்).
xx, 94 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 50., அளவு: 19×12.5 சமீ.
ஆசியுரைகள், வாழ்த்துரைகள், அணிந்துரைகளுடன் கூடிய இந்நூலில், துதிப்பாடல்கள், செந்தமிழும் சிவநெறியும் செழித்து வளரும் திருநெல்வேலி, ஆலயத்தின் தோற்றமும் அமைப்பும், சக்தி வழிபாடு, மூலமூர்த்தியின் அருட்பொலிவும் மகத்துவமும், வழிபாட்டு மரபுகள், திருவிழாச் சிறப்பு, மஹா கும்பாபிஷேகம், அன்னை முத்துமாரியின் அருளாட்சி, திருப்பணிகள், அம்பிகை அபிராமிப் பட்டருக்கு அருள்புரிந்தமை, நாடு போற்றும் சக்தி உபாசகர் ஆகிய அத்தியாயங்களின் வழியாக மேற்படி ஆலயத்தின் வரலாற்றுக் குறிப்புகள் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. இரண்டாம் பிரிவில் தேவி தோத்திரப் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அபிராமி அந்தாதி, ஸ்ரீ புவனேஸ்வரி தோத்திரம், ஸ்ரீ துர்க்காதேவி தோத்திரம், துர்க்கை துதி, ஸ்ரீ துர்க்காதேவி அஷ்டகம், இலக்குமி துதி, சகலகலாவல்லி மாலை, சரஸ்வதி அந்தாதி, ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருப்பொன்னூசல், ஸ்ரீ முத்துமாரி அம்மன் போற்றிப் பத்து ஆகியவை இப்பிரிவில் தொகுக்கப்பட்டுள்ள தோத்திரப் பாடல்களாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14791).