13154 ழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலய வரலாறு.

சி.ப.தங்கதுரை (தொகுப்பாசிரியர்). வாழைச்சேனை: திருமதி சி.ப.தங்கதுரை, இளைப்பாறிய அதிபர், விநாயகபதி, இணை வெளியீடு, மட்டக்களப்பு: வேர்ள்ட் வொயிஸ் பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1998. (மட்டக்களப்பு: ஈஸ்ரன் கிராப்பிக்ஸ், 205/2, பார் வீதி).

xiii, 103 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×14.5 சமீ.

கிழக்கிலங்கையில் கல்குடாத் தொகுதியின் தலைநகராகத் திகழும் வாழைச்சேனையில் அமைந்துள்ள ஸ்ரீ கைலாயப் பிள்ளையார் ஆலய வரலாறு இங்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. மகிமைகள் பல கண்ட இவ்வாலயத்தின் வரலாறு, கண்டியரசனின் ஆட்சிக்குட்பட்டு அதிகாரியாகவிருந்த ஆறுமுகம் பட்டங்கட்டியின் காலத்திலும் இவ்வழிபாடு இருந்ததாகக் கர்ணபரம்பரைக் கதைகள் உள்ளன. ஆயினும் கற்கோயிலாகக் கட்டப்பட்டதற்கான கணக்கு விபரமும், பின்னர் வண்ணக்கர், கங்காணிமாரும் முகாமைக்காரரும் செய்துகொண்ட உடன்படிக்கையாகிய பழைய ஆவணம் ஒன்றும் மட்டுமே இன்று ஆதாரமாகக் கிடைத்துள்ளது. இந்நிலையில் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் இவ்வாலய வரலாற்றை ஆசிரியர் தேடித் தொகுத்துப் பதிவுசெய்துள்ளார். வாழைச்சேனை மாநிலம், வாழைச்சேனை, ஆலயச் சூழல், ஆலயம் அமைந்த வரலாறு, ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் பற்றிய வரலாறும் பரிபாலனமும், திரு.க.கந்தையாவின் தனி முகாமைத்துவம், ஆலயத் தொடர்புசார் பாடசாலை, 1950இற்குப் பின் ஆலய பரிபாலனம் 05.05.1979 வரை, வரலாற்றுப் பரவலான பொது நிர்வாகம், முத்துமாரியம்மன் ஆலயம், ஆலய அமைப்பு, சிவசக்தி, சிவபெருமானும் விநாயகனும், மாசி மகம், தீர்த்தங்கள் பொது, மகாமகம், கும்பகோணம், ஸ்ரீ இராமபிரானும் பிரமகத்தி தோஷமும், ஸ்ரீ கைலாயப் பிள்ளையார் தீர்த்தக்கரையமைத்தல், மஹாளய பட்சம், ஆடி அமாவாசை, வருடாந்த மகோற்சவம், மஹோற்சவ விளக்கம், ஆலயத்தின் விசேட பூசைகள், ஆலயத்தின் முக்கிய சிறப்பம்சம், ஆலய நிர்வாகக் குறிப்புத் திரட்டு, பிள்ளையார் கதை, ஸ்ரீ கைலாயப் பிள்ளையாரும் காப்பு விரதமும் ஆகிய தலைப்புகளில் இந்நூலில் மேற்படி பிரதேச வரலாறும் ஆலய வரலாறும் இணைந்தே விரிகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21143).

ஏனைய பதிவுகள்

15238 உலக சூழல் தினம் (சிறப்புக் கட்டுரைகள்).

காசுபதி நடராசா (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட சூழல் முகவரவை, இணை வெளியீடு, மன்று நிறுவனம், 1வது பதிப்பு, ஜ{ன் 1992. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம்). vi, 80 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,