13155 ஸ்ரீ கதிர்காம முருகன்.

எஸ்.எஸ்.நாதன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: பி.சி.கதிர்வேல் முருகானந்தம், அதிபர், ஸ்ரீ முருகன் மில்ஸ், பேலியகொடை, 1வது பதிப்பு, மே 1964. (கொழும்பு 2: ஆர்.ஜே.ஆர். பிரிண்டர்ஸ்).

(4), 33 பக்கம், விலை: அன்பளிப்பு, அளவு: 18×12.5 சமீ.

கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்தவரும், முன்னாள் பதுளை, சமத்துவ சங்க கதிர்காம தொண்டர் படையின்  காரியதரிசியும், தொண்டன் ஆசிரியருமான ளு.ளு.நாதன் அவர்கள் தொகுத்தளித்துள்ள நூல் இதுவாகும். பதுளை, சமத்துவ சங்கத் தலைவர் வ.ஞானபண்டிதன் அவர்கள், முருகபக்தி மேலீட்டால் அவ்வப்போது இயற்றப்பட்டு கர்ணபரம்பரைக் கதைகளாகவிருந்த கதிர்காமம் பற்றிய கற்பனைக் கதைகளையும், பொருத்தமற்ற வியாக்கியானங்களையும் நீக்கி, 50 ஆண்டுகளாகத் தான் எழுதிச் சேகரித்து வைத்திருந்த குறிப்புகளைத் தன் மறைவின்முன் சமத்துவ சங்கக் காரியதரிசியான எஸ்.எஸ்.நாதன் அவர்களிடம் கையளித்து வைத்திருந்தார். சமத்துவ சங்க தாபகரும் தனது அரசியல் தந்தையுடமான அமரர் ஞானபண்டிதனின் மறைவினையொட்டி அக்குறிப்புகளை விரிவாக்கித் தொகுத்து இந்நூலை உருவாக்கி, இலவசமாக விநியோகித்துள்ளார். சிங்கள மக்கள் வேறு நாம் வேறல்ல என்பதையும், கதிர்காம ஆலய நிர்வாகத்தில் தமிழ் மக்களுக்கு உரிமை இருக்கவேண்டும் என்பது பற்றியும் சிங்களம் நம் கன்னித் தமிழில் இருந்தே பிறந்தது என்பதையும் ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்ட வேண்டும் என்பதை நோக்காகக் கொண்டே தான் இத்தகவல்களைத் திரட்டியதாக 21.11.1953இல் எழுதிய எமது நோக்கம் என்ற உரைக்குறிப்பில் வ.ஞானபண்டிதன் குறிப்பிட்டுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31582).

ஏனைய பதிவுகள்

12746 – தமிழ் மொழியும் இலக்கியமும் தரம் 6 செயல்நூல்(புதியப்படத்திட்டம் ).

எம்.நித்தியானந்தா. கொழும்பு 6: இனிய தென்றல் பதிப்பகம், இல 135, கனல்பாங் வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஜனவரி 2016. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, ஆட்டுப்பட்டித் தெரு). (4), 115 பக்கம்,