நா.குமாரஸ்வாமிக் குருக்கள். சிலாபம்: ஸ்ரீ முன்னேஸ்வரம் தேவஸ்தானம், 2வது பதிப்பு, 2012, 1வது பதிப்பு, 1927. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
vi, 26 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-0877-00-3.
இது மேற்படி தேவஸ்தான ஆதீன பரிபாலன தர்மகர்த்தாவாகிய பிரம்மஸ்ரீ நா.குமாரஸ்வாமிக் குருக்களவர்களால் விதிக்கப்பெற்று அவர்களின் பௌத்திரரும் (பிள்ளை வயிற்றுப் பேரன்) மேற்படி தேவஸ்தான தர்மகர்த்தாவுமாகிய மு.சோமாஸ்கந்தக் குருக்களால் பருத்தித்துறை கலாநிதி அச்சியந்திரசாலையில் முதற்பதிப்பாக பங்குனி 1927இல் அச்சிடப்பெற்ற கட்டளைச்சட்டமாகும். இது முன்னேஸ்வர ஆலயத்தில் சேவைபுரியும் திருப்பணியாளர்களின் பண்பும் பணியும் பற்றி விளக்குகின்றது. பழமை மரபுகளைத் தொடர்ச்சியாகப் பேணும்வகையிலும் தேவஸ்தானத்தில் நித்திய நைமித்திக காம்யகர்மங்கள் சிவாகம விதிப்படி சிறப்பாக நடைபெறும் பொருட்டும் இது கைந் நூலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. முகவுரை, அருச்சகாசாரியரின் நிபந்தனைகள், சாதகாசாரியரின் நிபந்தனைகள், பரிசாரகரின் நிபந்தனைகள், பாசகரின் நிபந்தனைகள், ஸ்தானீகரின் நிபந்தனைகள், கணக்கரின் நிபந்தனைகள், பலவேலைக்காரரின் நிபந்தனைகள், மெய்க்காவலனின் நிபந்தனைகள், திருமாலைகட்டியின் நிபந்தனைகள், மேளகாரரின் நிபந்தனைகள், ஏகாலியின் நிபந்தனைகள், தம்பட்டக்காரரின் நிபந்தனைகள், ஆலயத்துக்கு வருபவர்களின் நிபந்தனைகள், பொது நிபந்தனைகள் என பதினைந்து இயல்களில் இக்கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன.