பரம் ஜெயக்குமார் (இதழாசிரியர்). செங்கலடி: இந்து மாணவர் மன்றம், கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, 1வது பதிப்பு, 1989. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம்).
69 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ.
‘இந்து நதி’ கிழக்கு பல்கலைக்கழக இந்து மாணவர் மன்றத்தினரின் வருடாந்த வெளியீடாகும். இதன் முதலாவது மலர் 1987ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மலரின் உள்ளடக்கத்தில் இந்து சமய ஆய்வுக் கட்டுரைகள், புராண இதிகாச இலக்கிய பதிவுகள், சித்தாந்த விளக்கங்கள் என்பவற்றுடன் மன்றத்தின் செயற்பாடுகள் பற்றிய செய்திப் பதிவினையும் தாங்கி வெளிவந்தது. இம்மலரில் சமர்ப்பணம், சுவாமி ஜீவனானந்த அவர்களின் வாழ்த்துரை, கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.சந்தானம் அவர்களின் ஆசிச் செய்தி, கிழக்குப் பல்கலைக்கழக இந்து மாணவர் மன்றப் பெருந்தலைவர் பேராசிரியர் மனோ.சபாரத்தினம் அவர்களின் வாழ்த்துரை, கிழக்குப் பல்கலைக்கழக இந்து மாணவர் மன்றச் சிரேஸ்ட பொருளாளர் கலாநிதி க.சபேசன் அவர்களின் வாழ்த்துரை, இந்து மாணவர் மன்றத் தலைவரின் ஆசியுரை (எஸ்.வரதராஜன்), இதழாசிரியரின் இதயத்திலிருந்து….. (பரம்.ஜெயக்குமார்), கிழக்குப் பல்கலைக்கழக இந்து மாணவர் மன்ற நிர்வாகக் குழு 1988-1989, தமிழ், முஸ்லிம் கலாசார பாரம்பரியங்களின் ஒன்றித்த தன்மைகள் காணப்படுவதற்கான காரணங்கள் – ஒரு நோக்கு (எம்.ஐ.அப்துர் ரஸ்ஸாக்), இந்து – பௌத்த அறநியமங்கள் – ஒப்புமை (தனபாக்கியம் குணபாலசிங்கம்), மாணிக்கவாசகரும் குவலயானந்தமும் (கு.ஓ.ஊ.நடராசா), கிறீஸ்த்தாப்தத்திற்கு முந்திய கதிர்காமம் (சி.க.சிற்றம்பலம்), விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் (சுவாமி செல்லத்துரை), திருமூலர் காட்டும் திருநெறி (பண்டிதர் வி.ரி.செல்லத்துரை), இலங்கைப் பூர்வ குடிகளும் சிவ வழிபாடும் (ஆ.வேலுப்பிள்ளை),கவிதை: இந்து மதம் (சோமலிங்கம்), சைவசித்தாந்த தத்துவங்கள் (கு.குமுதினி), இந்து மதம் கூறும் இக்கால விஞ்ஞானம் (பி.ஆர்.செல்வகுமார்), இந்து மதத்தில் கிரியைகள் பற்றி ஒரு கண்ணோட்டம் (எஸ்.பகீரதன்), சௌந்தர்யலகரியும் அபிராமி அந்தாதியும் (சா.தவமணிதேவி), ஆங்கில வாணி (க.கணபதிப்பிள்ளை), இந்து மாணவர் மன்றச் செயலாளர் அறிக்கை (வே.கேதீஸ்வரராசா), எம் சிரம் தாழ்வது இவர்களுக்கு – இந்து மாணவர் மன்றம் ஆகிய ஆக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28333).