13160 ஈழநாடு நல்லூர்க் கந்தன் திருவிழா மலர் 1966.

யாழ்ப்பாணம்: ஈழநாடு அலுவலகம், சிவன்கோவில் மேலை வீதி, 1வது பதிப்பு, 1966. (கொழும்பு: மெய்கண்டான் அச்சகம், 161, செட்டியார் தெரு).

(52) பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: 50 சதம், அளவு: 28×21 சமீ.

1966ஆம் ஆண்டு நல்லூர்க்கந்தன் திருவிழாவை முன்னிட்டு வெளியிடப்பெற்ற சிறப்பிதழ்.  நல்லூர்க் கந்தா வருக (சேந்தன்), அர்ப்பணம் (ஈழநாடு), கந்தர் அலங்காரம், நல்லூர் முருகன் நவிலரும் மாட்சி (வ.மு.இரத்தினேஸ்வர ஐயர்), அருள் மணம் கமழட்டும் (இ.குமாரதாஸ் மாப்பாண முதலியார்), நல்லூர் தேவஸ்தானம் பரபாவ வருஷ மகோற்சவ விசேஷ தினங்கள், நல்லைக் கந்தனின் ஆலய வரலாறு, நல்லூர் கந்தபெருமானே (கி.வா.ஜகந்நாதன்), நல்லைக் கந்தனின் நல்விழாப் பொலிவு-(ஆர்.பி.ஹரன்), திருமுருகன் திருமணம் (சி.கணபதிப்பிள்ளை), முருகா ஒரு முடங்கல் (ச.வே.பஞ்சாட்சரம்), ஞான வாழ்வு தருவான் (திமிலைக்கண்ணன்), இறை வழிபாடு (திருமுருக கிருபானந்த வாரியார்), முருகா எனும் நாமம் (குகானந்த வாரியார்), உருகிடுவாய் மனமே, கந்தனே கண்கண்ட தெய்வம், கிளிக்கண்ணி -நற்சிந்தனை, நல்லூர் வீதியில், அறுவர் பயந்த அறமர் செல்வன் (தங்கம்மா அப்பாக்குட்டி), கந்த சஷ்டிக் காட்சிகள், நல்லூர்க் கந்தன் (இ.நாகராஜன்) ஆகிய பக்தி இலக்கியப் படைப்பாக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 04578).

ஏனைய பதிவுகள்