நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
(8), x, 192+(48) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.
நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் வெளியிடப்படும் மலர் இது. 26ஆவது மலராக 2018 ஆம் ஆண்டின் நல்லூர்த் திருவிழாவின்போது இச்சிறப்பிதழ் வெளிவந்துள்ளது. ஆசிச்செய்திகளுடன் எல்லாம் அவனே எனக்கு (த.ஜெயசீலன்), பாசுரங்கள் எழுந்து வேதசுரங்களாக தேசம் சிறக்க தேர் ஏறிவா சண்முகா (கை.பேரின்பநாயகம்), நல்லைக் குமரப் பா (நவபாலகோபால்), கந்தப் பெருந்தெய்வப் பெருமானே (கு.வீரா), நல்லூரின் நாதா நலமருள வா வா (வேலணையூர் சுரேஷ்), உன்னிடத்தில் ஓடிவந்தேன் (சித்ரா சின்னராஜன்), உளமுருகி முருகனை வேண்டி நீ பாடு (கே.ஆர்.திருத்தவராஜா), எமையாளும் வரம் வேண்டினேன் (சிவ.சிவநேசன்), நல்லருள் நல்கிடும் நல்லூரான் (தே.சுகிர் நாகேந்திரா), நல்லைப் பதி மீதிலே இல்லையெனத் துயர் மாளுமே (து.மனோகரன்), வழிகாட்டும் துணையாக வரவேண்டும் (அம்சா பரமநாதன்), நல்லைக் குமரா தந்திடு பதிலை (சு.நாகலோஜினி), பரிபாட்டும் செவ்வேளும் (அ.சண்முகதாஸ்), சேயோன் மேவரை உலகு (மனோன்மணி சண்முகதாஸ்), சிவனே முருகன், முருகனே சிவன் (வை.சி.சிவசுப்பிரமணியன்), சுப்ரமண்ய மகோத்சவம் (ச.பத்மநாதன்), தமிழ் உணர்த்தும் பக்தி (சிவ.மகாலிங்கம்), கௌமார வழிபாட்டு மரபில் ஸ்ரீமயூரகிரி (குன்றக்குடி), ஸ்ரீ சண்முக சுப்ரபாதம்-பக்திநெறி நோக்கு (மகேஸ்வரக் குருக்கள் பாலகைலாசநாத சர்மா), நல்லூர்க் கந்தசுவாமியும் நற்சிந்தனையும் (சண்முகயோகினி ரவீந்திரன்), தமிழ் வளர்ச்சிப் பாதையில் அடிகளாரும் ஆறுமுக நாவலர் பெருமானும் (மகாதேவ ஜெயராமசர்மா), முருகனைப் போற்றிப் பாடிய அருணகிரிநாதர் (சுவாமிநாதபிள்ளை தேவமனோகரன்), அருணகிரிநாத சுவாமிகள் அருளிய அமுதம் (இ.சரவணபவன்), பாடும் பணியே பணியாய் அருள்வாய் (கீர்த்தனா ஆறுமுகதாசன்), யாழ்ப்பாணத்தில் முருகத் தலங்களின் தோற்றம் வரலாறு சமூகப் பின்னணி மற்றும் வளர்ச்சி (சண்முகலிங்கம் சஜீலன்), ஆகமஞ்சாராத வழிபாட்டு மரபில் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வகிபங்கு (ஆ.சசிநாத்), திருமுருகாற்றுப்படையும் ஆறுபடைவீடும் (செ.பரமநாதன்), நல்லூர்க் கந்தப் பெருமானின் எழிற்கோலம் காண நாம் என்ன புண்ணியம் செய்தோமோ? (ஸ்ரீராம்குமார் நதிபரன்), தேரடியில் இருந்து பாரடா தேகமெல்லாம் புல்லரிக்கும் (கே.எஸ்.சிவஞானராஜா), மணிவாசகரின் வாசகமும் பயனும் (வ.கோவிந்தபிள்ளை), சைவசமய வரலாற்றில் சிவபுராணம் பெறும் முக்கியத்துவம் (க.கணேசதேவா), திருமந்திரத்தில் குரு சிஷ்யன் (வைத்தியலிங்கம் பாலகிருஷ்ணன்), இந்திய மெய்யியலில் அத்வைதம் (வி.ஆரணி), திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை நெறி (மாதவி உமாசுத சர்மா), வேழமுகத்து விநாயகன் (பொ.சிவப்பிரகாசம்), நல்லூர்க் கந்தன்: சிறு குறிப்பு (கந்தையா கனகசபை), சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரனார் (வை.இரகுநாத முதலியார்), அகவை நூறில் தடம்பதித்த திருப்புகழ் திலகம் தியாகராஜ சுவாமிகளும் அவர்தம் ஆன்மீக வாழ்வும் (இன்பம் அருளையா), தெய்வீக மகளிர் வரிசையில் சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி (மு.சிவலிங்கம்), முருக விரதமும் அனுட்டான நியமங்களும் (க.ஜெயானந்தன்), தவத்திரு மார்க்கண்டு சுவாமிகள் (ந.சண்முகராசா), ஆலயங்கள் ஆவணப்படுத்தப்படல் வேண்டும் (ந.சதாசிவ ஐயர்), 2018இல் யாழ் விருதுபெறும் சிவத்திருசெந்திவேல் மோகனதாஸ் சுவாமிகள் (ப.ஆறுமுகதாசன்) ஆகிய ஆக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 063497).