மலர் வெளியீட்டுக் குழு. கொழும்பு: இலங்கை பிரதேச அபிவிருத்தி இந்து சமயத் தமிழ் அலுவல் அமைச்சு, 1வது பதிப்பு, ஏப்ரல் 1980. (கொழும்பு: அரசாங்க அச்சகத் திணைக்களம்).
(2), 46 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
28.04.1980 அன்று நடந்த கும்பாபிஷேகத்தின்போது வெளியிடப்பெற்ற சிறப்பு மலர். இம்மலரில், விநாயகர் துதி, ஸ்ரீP கணேசபஞ்சரத்தினம் (தமிழாக்கம்), ஸ்ரீ கணேசபஞ்சரத்தினம் (சிங்களவாக்கம்), அகஸ்தியரால் செய்யப்பட்ட ஸ்ரீஸ்காந்தத்திலுள்ள ஷடானனாஷ்டகம் (தமிழாக்கம்), அகஸ்தியர் அருளிய ஸ்ரீ ஸ்காந்தத்திலுள்ள ஷடானனாஷ்டகம் (சிங்களவாக்கம்), ஸ்ரீஆதிசங்கரர் அருளிய ஸ_ப்ரஹ்மண்ய புஜங்கம் (தமிழாக்கம்), ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ஸ_ப்ரஹ்மண்ய புஜங்கம் (சிங்களவாக்கம்), கோளறு பதிகம் (திருஞானசம்பந்தர் அருளியது), திருவாசகம் எட்டாந்திருமுறை – மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகம், திருவிசைப்பா- ஒன்பதாந் திருமுறை-திருச்சிற்றம்பலம் திருமாளிகைத் தேவர் பாடியது, திருப்பல்லாண்டு – சேந்தனார், திருப்புராணம்- பன்னிரண்டாந் திருமுறை, பெரியபுராணம் – சேக்கிழார் சுவாமிகள், அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ், அநுராதபுரக் கதிரேசன் கோவில் பதிகம், அநுராதபுரம் கதிரேசன் கோவில் வரலாறும் கும்பாபிஷேக விபரமும், புனருத்தாரன மகா கும்பாபிஷேக விபரம் ஆகிய ஆக்கங்களை இம்மலர் உள்ளடக்கியுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24537).