ஐ.தி.சம்பந்தர் (இதழாசிரியர்). கொழும்பு 6: காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோவில் கும்பாபிஷேக விழாச்சபை, கொழும்புக் கிளை, 344, காலி வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1974. (கொழும்பு 12: நியூ லீலா அச்சகம், 33, செபஸ்தியன் மேடு).
(50), 25-112 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ.
24.8.1974 அன்று நிகழ்ந்த குடமுழுக்கு விழாவின்போது வெளியிடப்பட்ட சிறப்பு மலர். பிரமுகர்களின் ஆசிச்செய்திகளுடன் திக்கரை முருகன் குடமுழுக்கு விழா தோற்றமும் கோவில் அமைப்புகளும் (ஐ.தி.சம்பந்தன்), பிரசித்தி பெற்ற காரைநகர் திக்கரை முருகன் திருத்தல வரலாறு, அம்பாளை உபாசிப்பதன் பயன் (சங்கராச்சாரிய சுவாமிகள்), திக்கரையில் வாழ் முருகன் திருவடிகள் போற்றி (வ.குகசர்மா), முருகனின் திருவுருவங்கள் (ந.ரா.முருகவேள்), திருமுருகன் பெருமை (தி.பட்டுச்சாமி ஓதுவார்), முருகன் அருட்செல்வர்கள் முருகனைப் போற்றிய வண்ணம் (நா.முத்தையா), செவ்வேளும் செந்தமிழும் (புலவர் பாண்டியனார்), காரை அபிவிருத்திச் சபையின் 1974-75 வருட அலுவலர்கள், திருக்கார்த்திகை தீப மகிமை (சி.நவரத்தினம்), கந்தர் அனுபூதி (வி.தியாகராஜன்), திருப்பணி (மு.சபாரத்தினம்), திருட்டுக் குடும்பம் (செ.தனபாலசிங்கம்;), பார் புகழ் முருகன் (பெ.திருஞானசம்பந்தன்), எங்கள் குலதெய்வம் (யு.சு.ஏ.சோமசுந்தரம்), கடவுள் வழிபாடு (சி.கணபதிப்பிள்ளை), மனமுருகி இறைவனை வழிபடுக (திருமுருக கிருபானந்த வாரியார்), சைவம் (சி.கே.சுப்பிரமணி முதலியார்), வீரனும் சூரனும் (சோமசுந்தரம் செட்டியார்), ஆலய அமைப்பு (எம்.சி.இராமச்சந்திர செட்டியார்), முன்னிய கருணையாறுமுகப் பரம்பொருள் (சி.விநாசித்தம்பி), கும்பாபிஷேகம் (கே.கைலாசநாதக் குருக்கள்), திருவாசகத் தேன் (அ.தவபாலன்), இல்லையோ வளம் ஈசனே (க.மயில்வாகனம்), கிரியைகளின் தத்துவத்தை பொதுமக்கள் உணரச்செய்தல் வேண்டும் (கி.இலட்சுமணன்), திக்கரை முருகன் கும்பாபிஷேக விழா பற்றி (கி.பி.ஹரன்), கோணேசன் கொலுவிருக்கும் கோணாமலை (ஈழவேந்தன்), பெருஞ்சாந்தி அல்லது கும்பாபிஷேகம் (ச.தண்டபாணி தேசிகர்), சொற்காத்த பொற்பாவை (திருமதி ப.நீலா), ஆகமம் வியந்து கூறும் குமர வழிபாடு (என்.எஸ்.பரமேஸ்வரக் குருக்கள்), உபயகாரர்களின் பெயர்கள், Worship of Muruga (குல.சபாநாதன்), மலரை மலரவைத்தவர்கள், சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, மண்டலாபிஷேகம் நடந்த அற்புதக் கதை ஆகிய படைப்பாக்கங்களும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.