வ.நடராஜா, எச்.எச்.விக்கிரமசிங்கா (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 13: தெக்ஷணத்து வேளாளர் மகமை பரிபாலன சங்கம் லிமிட்டெட், 98, ஜிந்துப்பிட்டித் தெரு, ஜெயந்தி நகர், 1வது பதிப்பு, பெப்ரவரி 1996. (சென்னை: சக்தி வண்ண ஆய்வகம், சக்தி புரோசஸ்).
(172) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27×21.5 சமீ.
கொழும்பு ஜிந்துப்பிட்டி ஜெயந்தி நகர் ஸ்ரீவள்ளி தெய்வயானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா 04.02.1996 அன்று நடைபெற்றவேளை வெளியிடப்பெற்ற இச்சிறப்பு மலரில் அருளுரைகள், வாழ்த்துரைகள், சமயக் கட்டுரைகள், புகைப்படங்கள் என்பன அடங்கியுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கங்கள்; 16084/34634).