மலர்க்குழு. புங்குடுதீவு: சைவ கலா சங்கம், 1வது பதிப்பு, 1967. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம், 213, காங்கேசன்துறை வீதி).
(4), 66 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19.5 சமீ.
புங்குடுதீவு சைவ கலா சங்கம் 1925இல் உதயமானது. பாடசாலைகளை நிறுவுவதில் ஆர்வம் கொண்டிருந்த இச்சங்கத்தினரின் முயற்சியால் ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலயம் 1926ஆம் ஆண்டிலும், புங்குடுதீவு ஸ்ரீ கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயம் 8 ஆம் வட்டாரம் மடத்துவெளியில் 1935இலும் நிறுவப்பட்டன. சைவ கலா சங்கம் 1967இல் புங்குடுதீவில் பெரும் எடுப்பில் சைவ மகாநாடு ஒன்றையும் நடத்தியிருந்தது. அம்மகாநாட்டின்போது வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இதுவாகும். இம்மகாநாட்டின் மலர்க் குழுவில், சி.இ.சதாசிவம்பிள்ளை, மு.ஆறுமுகன், கு.வி.செல்லத்துரை, சி.ஆறுமுகம், க.சிவராமலிங்கம், வே.பொன்னம்பலம், இ.பாக்கியநாதன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இம்மலரில் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன் (க.வெள்ளைவாரணனார்), நாவலர் உகுத்த கண்ணீரில் முதற்றுளி (சி.கணபதிப்பிள்ளை), பழியோரிடம் பாவமோரிடம் (அம்பை இரா.சங்கரனார்), சைவ சாதனங்கள் (அ.நடேச முதலியார்), மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் (பொன்.கிருஷ்ணபிள்ளை), கடவுளை உணர்தல் (க.தேவதாசன்), கங்கையிற் பாதி-கந்தனிற் பாதி (தமிழ்நாடன்), தொண்டர் தம் பெருமை (நா.முத்தையா), திருவிழாக்களின் திவ்விய தத்துவங்கள்(ஐ.கைலாசநாதக் குருக்கள்), சங்கத் தமிழில் சிவபரம்பொருள் (நா.சிவபாதசுந்தரனார்), சைவப் பெருந்தொண்டர் பசுபதிப்பிள்ளை (மு.ஆறுமுகன்), புங்குடுதீவின் கல்விநிலை (சு.வில்வரத்தினம்), சேக்கிழார் செந்தமிழ் (பொன்.அ.கனகசபை), நயினை அமர் சிவசத்தி நற்பதங்கள் போற்றி (நா.கந்தசாமி), திருமுறைகளுக்கு வழிகாட்டுந் திருமுறை (க.கணபதிப்பிள்ளை), வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி (சி.ஆறுமுகம்), சைவப் பெண்களின் பணி (க.தையல்நாயகி), எங்கே விரைகிறோம்? (ஈழத்துச் சிவானந்தன்), சேர்.பொன்.இராமநாதனின் சமயப்பணி (ச.அம்பிகைபாகன்), ஓம்பீமாய தேவாய நம-அறிவார் தொழில் (த.வேதநாயகி), அழுதால் உன்னைப் பெறலாமே (ஆ.கலியாணசுந்தரேசன்), அன்புத் திருவுருவங்கள் (வி.சத்தியமூர்த்தி) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.