கனகசபாபதி நாகேஸ்வரன் (பதிப்பாசிரியர்). வவுனியா: அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில், கோவில்குளம், 1வது பதிப்பு, ஜுன் 1996. (கொழும்பு 13: லட்சுமி அச்சகம், 195, புளுமெண்டால் வீதி).
(6), 7-215 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×22 சமீ.
கோயில்குளம் அகிலாண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் அறங்காவலர் சபையினரால் 14.06.1996இல் வெளியிடப்பட்டது. வாழ்த்துச் செய்திகள், ஆசியுரைகளுடன் இம்மலரில் சிறப்புக் கட்டுரைகளாகவும், பாடல்களாகவும், கோவிற்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (கந்தையா சின்னத்தம்பி), கோயிற்குளம் அகிலாண்டேஸ்வரம் திருத்தல வரலாறு (ஆ.நவரெத்தினராசா), வன்னி மாநகரில் சரித்திரம் படைக்கும் திருக்கோவில் (கா.மகேஸ்வரலிங்கம்), கோயில்குளத்தீஸ்வரன் திருப்பள்ளியெழுச்சி (ஆழ்கடலான்), அகிலாண்டநாயகி பிள்ளைத்தமிழ் (மீனாட்சிசுந்தரம்பிள்ளை), திருப்பொன்னூஞ்சல் (வ.சிவராசசிங்கம்). ஆதிசங்கரரும் இந்து மதமும் (அ.மகேஸ்வரி), சிவபரத்துவம் (வ.செல்லையா), பாணலிங்கம் (சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள்), அருள்புரக்கும் அகிலாண்டேஸ்வரி (வசந்தா வைத்தியநாதன்), சிவத்தமிழ்ப் பாமாலை (நா.வி.மு.நவரத்தினம்), கீர்த்தனைகள் (முருக வே.பரமநாதன்), சிவநெறி (ஆ.குணநாயகம்), சிவவழிபாடு (சுப்பிரமணியம் கனகரெத்தினம்), வன்னிச் சிவாலயங்கள் (ந.ஞானவேல்), கோயில்கள்-சிறுகுறிப்பு (இரா.நாகசாமி), கோவில் வழிபாடு (மா.கனகலெட்சுமி), தெய்வீகத் திருத்தலங்கள் (கனக.நாகேஸ்வரன்), திருமூலர் கண்ட சிவம் (சி.தில்லைநாதன்), கைலைமலையானே போற்றி போற்றி (தமிழின்பம் மாணிக்கராஜா), கண்ணப்பரும் காளத்தியப்பரும் (அகளங்கன்), சிவலிங்க தத்துவம் (சி.வடிவேல்), சிவமூர்த்தி – சிவதத்துவ விளக்கம் (சிவத்தமிழ்த் தொண்டன்), சைவத்தின் ஊற்றுக்கண் (குமாரசாமி சோமசுந்தரம்), திருமுறைகள் தொடரட்டும் (இ.ஜெயராஜ்), தேவாரங்களும் பண்களும் (சி.குமாரசாமி), ஓசையும் ஒலியும் (நா.வி.மு.நவரத்தினம்), பொன்மழைப்பாடல்கள் (கவிஞர் கண்ணதாசன்), அநாதிமதம் (செ.தமிழ்ச்செல்வன்), இந்துசமயமே மெய்ச்சமயம் (வேலணை வேணியன்), சைவமும் தமிழும் (கே.எஸ்.அரவிந்தன்), சைவநீதி (பூமணி குலசிங்கம்), இன்றைய சைவச் சமூகமும் சமய உணர்வு நலனும் (நா.பாலேஸ்வரி), சைவசமய அறிவு (அருள்மொழிச் செல்வர்), நிரந்தர சஞ்சீவி (தி.இராஜகோபால்), மெய்ஞானபோதம் (இ.திருநாவுக்கரசு), திருமந்திரத்தில் சமய ஒழுக்கம் (வ.சிவராசசிங்கம்), பெரியபுராணமும் சைவசித்தாந்தமும் (தங்கம்மா அப்பாக்குட்டி), வேண்டத் தக்கது (வை.கா.சிவப்பிரகாசம்), யாதும் உனையன்றி உண்டோ (யோகேந்திரா துரைசாமி), ஆன்மீக வள்ளல் ஆத்மஜோதி (கே.பொன்னுத்துரை), அழிக்கமுடியாத கோயில்குளம் சிவத்திருத்தலத்தின் மறைக்கமுடியாத தல வரலாறு (திருச்சி எம்.ஹரிலிங்கம்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16082).