மலர்க் குழு. யாழ்ப்பாணம்: ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயம், கோண்டாவில் கிழக்கு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை).
58 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17.5 சமீ.
கோண்டாவில் கிழக்கு ஸ்ரீநாகபூஷணி அம்பாள் ஆலய ஜீர்ணோத்தாரண புனராவர்த்தன நூதன ராஜகோபுர(திரிதள) சுந்தர துவிதள விமான பிரதிஷ்டா நவகண்டபக்ஷ மகாகும்பாபிஷேகத் திருவிழா 02.02.2017 அன்று சிறப்பாக நடைபெற்றவேளையில் வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இதுவாகும். 1918ஆம் ஆண்டு இக்கிராமவாசியான பெரியார் நாகப்பர் சின்னப்பு விதானையார் அவர்களால் அவரது மூத்த புதல்வர் செல்லப்பா அவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு காணியில் உருவாக்கப்பட்டது. இக்காணி 1942 மார்கழி 19ஆம் திகதி ஆலயத்திற்கென பொதுச்சொத்தாக வழங்கப்பட்டது. 2014இல் இவ்வாலயம் திருத்தியமைக்கப்படவேண்டுமென ஆலய பரிபாலன சபையினரால் தீர்மானிக்கப்பட்டது. புனரமைப்பின் பின்னர் இக் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.