13187 புத்தளம்-மணல்குன்று ஸ்ரீ கருமாரி (பொம்மக்கா) அம்மன் கோயில் கும்பாபிஷேக ஞாபகார்த்த மலர்.

மலர் வெளியீட்டுக் குழு. புத்தளம்: ஆலய பரிபாலன சபை, மணல்குன்று ஸ்ரீ கருமாரி (பொம்மக்கா) அம்மன் கோயில், 1வது பதிப்பு, நவம்பர் 2000. (புத்தளம்: A & A பிரின்டர்ஸ்).

(3), 33 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×16.5 சமீ.

03.11.2000 அன்று இடம்பெற்ற கும்பாபிஷேக நிகழ்வின் ஞாபகார்த்தமாக மணல்குன்று ஸ்ரீ கருமாரி (பொம்மக்கா) அம்மன் கோயில் பரிபாலன சபையினர் இந்நூலை வெளியிட்டுள்ளனர். மலர்வெளியீட்டுக் குழுவில் மு.கௌரிகாந்தன், அ.ந.இராஜகோபால், மோஸஸ் மரியதாசன், மா.நாகராஜா, மா.கதிர்காமநாதன் ஆகிய ஐவரும் பணியாற்றியுள்ளனர். ஆசியுரைகள் வாழ்த்துச் செய்திகளுடன் கருமாரியம்மன் பாமாலை (எஸ்.சிவமூர்த்தி), அருள்வளர் ஸ்ரீ கருமாரியம்மை தோத்திரப் பதிகம் (ச.சுப்பிரமணியம்), சமயமும் பண்பாடும் (சி.தில்லைநாதன்), பத்தளம் கருமாரியம்மன் கோயில் வரலாறும் மகிமையும் (மு.கௌரிகாந்தன்), விடைபெறுகிறேன் வணக்கம் (சின்னத்தம்பி சிவகுருநாதன்), நவராத்திரி உத்சவம் (சு.சிவபாதசுந்தரம்), கும்பாபிஷேகக் கிரியை சில குறிப்புகள் (தா.முருகேசம்பிள்ளை), காக்கும் கருமாரி அம்மன் (சுதாராஜ்), பொம்மக்கா அம்மனைப் போற்றி வழிபடுவோம் (அ.குணபாலசிங்கம்), கருமாரி அம்மன் ஆலயத்தின் சமூக முக்கியத்துவம் (மோஸஸ் மரியதாசன்), சக்தி வழிபாட்டின் முக்கியத்துவம் (இ.கிருஷ்ணபிள்ளை), காத்தருள்வாய் கருமாரி (மா.நாகராஜா), ஆலய அமைப்பும் வழிபாடும் (காயத்திரி இராஜகோபால்), குறள்மணிகள், தோத்திர மணிகள், சகலகலாவல்லி பாமாலை, கருமாரியம்மன் குடமுழுக்கு நிகழ்வு (சு.மகேந்திரன்) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்