மலர்க் குழு. கொழும்பு 15: வட கொழும்பு இந்து பரிபாலன சங்கம், 40A, கோவில் (டெம்பிள்) வீதி, 1வது பதிப்பு, 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை).
xxiv, 300 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.
தென்னிலங்கயில் இந்துக் கோயில்கள், இரத்மலானையிலுள்ள கொணா கோவில் எனப்பெறும் இந்து ஆலயத்தின் வரலாறு, கொழும்பில் நாட்டுக்கோட்டை நகரத்தார் கோயில்கள், கொழும்பில் இந்துப் பாரம்பரியம்: இந்து சமய நிறுவனங்களும் இந்துக் கல்விக்கூடங்களும் ஏற்படுத்திய தாக்கங்கள், கொழும்பு மாவட்டத்தில் இந்து மாணவர்களின் கல்விநிலை, கொழும்பில் தமிழர் அல்லாத சமூகத்தவர்களின் இந்து சமயப் பணிகள், கொழும்பு நகர வாழ்க்கையில் இந்துப் பெண்கள் ஆகிய கட்டுரைகளையும், சுவாமி ஆத்மகணானந்தஜீ, சிவஸ்ரீ சி.குஞ்சிதபாதக் குருக்கள், எஸ்.சுப்பிரமணியம் செட்டியார், பொன் வல்லிபுரம், வே.தேவசேனாதிபதி ஆகியோர்களின் நேர்காணல்களும், கொழும்பு மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட இந்து ஆலயங்கள், நிறுவனங்கள், அறநெறிப் பாடசாலைகள், கொழும்பில் இந்து வழிபாட்டிடங்கள், கொழும்பில் சத்திரங்கள், நிறுவனங்கள், சங்கங்கள் ஆகியவற்றின் விபரங்கள் என்பன விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34148).