மலர்க் குழு. கொழும்பு 6: வெள்ளவத்தை மயூறா பிளேஸ் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பரிபாலன சபை, 1வது பதிப்பு, நவம்பர் 1987. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி).
(146) பக்கம், வரைபடங்கள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ.
பிரபவ ஆண்டு கார்த்திகைத் திங்கள் ஒன்பதாம் நாள் புதன்கிழமை (25.11.1987)இல் நடைபெற்ற கும்பாபிஷேக வைபவத்தின்போது வெளியிடப்பெற்ற சிறப்பு மலர். அருளாசி உரைகளுடன் வெளியிடப்பட்ட இம்மலரில், ‘மயூரா பதிமீது வா’ (நெய்தல் நம்பி), ஆலய பரிபாலன சபைத் தலைவர் நல்லுரைகள் (இ.பி.சுப்பிரமணியம்), பரிபாலன சபை உபதலைவர் ஓ.புருஷோத்தமன் அவர்களது வேண்டுதல் உரை, செயலாளர் சிந்தனைகள், பொருளாளர் போற்றும் பொன்னுரைகள் (இ.கிருஷ்ணன்), கொழும்பு மாநகர் வெள்ளவத்தை மயூறா பதி ஸ்ரீ மகா காளி அம்பாள் கோயில் மகா கும்பாபிஷேகம், கொழும்பு வெள்ளவத்தை மயூறா இடம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் பரிபாலன சபையினர் விபரம், அருள்மழை பொழியும் அம்பிகை (உடப்பூரன்), மனக்கோயில் மணித்தீபன் (மலர் ஆசிரியர்), பிரதம ஸ்தபதி திரு.S.S.மகேஸ்வரனின் மனம் நிறைந்த வார்த்தைகள், அரச மர நிழலில் அற்புதக் காளி, ஐதீகப் பாடல்கள் – ‘திரட்டு’, திருப் பொன்னூஞ்சல் பதிகம், நாக தோஷங்கள் தீர்க்கும் நாகேஸ்வரர், மூலத்தில் முதல்தேவி, திருவுருவங்களை கல்லாலும் செம்பாலும் அமைத்த காரணம் யாது? (திருமுருக கிருபானந்த வாரியார்), காத்திட வாருமம்மா (நிர்மலா விஜயகுமார்), விழிநீர் துடைக்கும் வித்தகி (பிரபாகரன்), அவள் பாதாரம் நமக்காதாரம் (பிரபாகரன் தம்பதியர்), தத்துவ முத்துக்கள், பஜன் பாடல்கள், அபிராமி அம்மை பதிகம் (சில பாடல்கள்), அருள்மிகு அபிராமிப் பட்டர் அருளிய அபிராமி அந்தாதி, எச்சரிக்கை (உடப்பூரன்), கும்பி (பதிகம்) (உடப்பூரன்), பஞ்ச காவியம் (உடப்பூரன்), Hinduism a way of Life ‘Life and death’ (Swami Sivananda), ஆலய அமைப்பு வரைபடம்இ கனவுலக வடிவங்களுக்கு காகிதங்களில் உருவம் அமைக்கும் அற்புத சித்திரக் கலைஞர், சக்தி வழிபாடு (ராதா மால்மருகேசன்), தெய்வ அன்னை (B.மகாலட்சுமி), எங்கும் நிறைந்த சக்தி! எமையாளும் சக்தி (சாந்தகுமாரி நானு), உள்ளமும் உடலும் (சுஜாதா நானு), எமது சமயம் (சுமதி துரைராஜர்), சக்தி வழிபாடு, தேவியர் மூவர் (இராஜேஸ்வரி மோகனதாஸ்), ஸ்ரீ பத்திரகாளியின் சிங்காரப்பணிக் குழு, நல்லார் யாவருக்கும் நமது இதய பூர்வமான இன்பம் கனிந்த நன்றிகள் (பரிபாலனசபை), மயூரா பதியமர் மாதேவி, பாமாலை – கண்ணன் (உடப்பூரன்) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 32075).