13194 ஸ்ரீ ஞானானந்த சேவா சமாஜம்: சிறப்புமலர் 1976.

மலர்க்குழு. கொழும்பு: ஸ்ரீ ஞானானந்த சேவா சமாஜம், 4. சம்னர் பிளேஸ், 1வது பதிப்பு, பெப்ரவரி 1976. (கொழும்பு 12:  சுதந்திரன் அச்சகம்).

(60) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×19 சமீ.

08.02.1976 அன்று வெளியிடப்பெற்ற இவ்வான்மீக மலரில், சத்குரு ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள் (ஸ்ரீ சுவாமி ஹரிதாஸ்),ஆலயங்களின் உட்பொருள் (ந.சரோஜினிதேவி), இணையில்லா இந்து தத்துவம்: தத்துவம் என்றால் என்ன? (டி.எஸ்.ஆர். இராம்தாஸ்),

இறைவன் மனிதனைப் படைத்தான்: மனிதனும் இறைவனைப் படைத்தான் (எஸ்.ராமசாமி ஸ்தபதி), ஸத்குரு பரமஹம்ஸ் ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள் சென்ற சில ஆண்டுகளுக்கு முன் மேல் நாட்டார் ஒருவர் வேண்டுகோளுக்கிணங்க ஒலிப் பதிவு கருவியின் முன் மொழிந்த அருள்வாக்கு, ஞானமலை (கி.வா.ஐகந்நாதன்), குருபக்தி (கிருபானந்தவாரியார்), பெறுதற்கரிய பேறு (அழ. வள்ளியப்பா), Spiritual Radiations of a Saint with special refernce to Swami Gnanananda (Swami Shantanand), திருவைந்தெழுத்து (தங்கம்மா அப்பாக்குட்டி), ஞானகுருவாக வந்த ஞானானந்த கிரி சுவாமிகள் (நா.முத்தையா), ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள் (சாது ராமா நந்த பாரதி),அற்புத சித்தன் (கி.வா.ஐகந்நாதன்), நாமாவளி ‘ஞானாநந்த மெய்ச்சுடர்’ (ப.நவநீதன்), ஸ்ரீ ஞானாந்தர் மாட்சி (கி.வா.ஐகந்நாதன்), ஸ்ரீ ஸத்குரு ஞானானந்தகிரி ஸ்வாமி அஷ்டோத்ரம், Satyam-Jnanam-Anantham-Brahma: Saint Gnananandagiri: Life Sketch by Kavi Yogi Suddananda Bharati Yoga Samaj, Masras – 20 ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39958).

ஏனைய பதிவுகள்

14264 பெண் என்றால் என்ன? ஆண் என்றால் என்ன?.

கம்லா பாசின். கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 425ஃ15, திம்பிரிகஸ்யாய வீதி, 1வது பதிப்பு, 2000. (நுகெகொட: தீபானி அச்சகம், 464, ஹைலெவல் வீதி, கங்கொடவில). iஎ, 49 பக்கம், சித்திரங்கள், விலை: