கல்வயலூர் ஆர்.வீ.கந்தசுவாமி. யாழ்ப்பாணம்: திருமதி யோகபாக்கியம் கந்தசுவாமி, இல.819/1, ஆஸ்பத்திரி வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2016. (மிருசுவில்: மாதுளன் பதிப்பகம், உசன்).
xvii, 182 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-43402-0-6.
இந்நூலில் ஆலயம் தொழுவது சாலவும் நன்று, திருநீற்றின் பெருமை, கச்சியப்பரும் கந்தபுராணமும், பக்தி, பயனில சொல்லாமை, வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல், நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன், நலம் தரும் நவராத்திரி, திருப்புகழ் அமுதம் தந்த அருணகிரிநாதர், தெய்வீக மணம் கமழும் மார்கழி மாதம், அண்ணாமலையின் சிறப்பு, திருவடி தீட்சையின் சிறப்பு, சிதம்பர இரகசியம், சித்திர புத்திரனாரும் சித்திரா பூரணையும், இறைபக்தியில் உண்மையும் பொய்யும் உண்டா?, இறைநாம மகிமை, வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும், யாகாவாராயினும் நா காக்க, இந்து மதமும் விரதங்களும், அன்புக்கும் உண்டோ அளவுகோல், சிவராத்திரியின் மகிமை, நம்பினோர் கெடுவதில்லை, பசுவைக் காப்போம் பலனைப் பெறுவோம், செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம், கந்தப் பெருமானின் காவடி வரலாறு, சித்தர்கள், திருமுறைகள், நமசிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரம், அகந்தையை அழித்த முருகன், விநாயகர் சதுர்த்தி, கண்ணா உன்னைப் பார்த்த கண்ணால் இந்த உலகத்தைப் பார்க்க மாட்டேன், வேறும் பேறு இதன்மேல் உண்டோ, அழுதால் உன்னைப் பெறலாமே, பகவத் கீதையும் உத்தவ கீதையும், விக்கினங்கள் தீர்க்கும் வில்வபத்திரம், விக்கினங்கள் தீர்க்கும் விக்கினேஸ்வரன், வடிவேலனின் வாகனங்கள், பார்வதி அம்மை பசுவாகத் தோன்றிய தலம், துளசியும் வரலாறும் மகத்துவமும், கிருஷ்ண பகவானும் அக்கினி பகவானும் (காண்டாவனம்), திருஞானசம்பந்தரும் பூம்பாவையும், மாற்றுரைத்த விநாயகர், திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி, ஸ்ரீராம நவமி, வினைகள் போக்கும் விநாயகர் சஷ்டி, சிக்கல் தலத்தில் காட்சியளிக்கும் சிங்காரவேலன், தட்சன் யாகமும் வீரபத்திரர் அவதாரமும், திருஞானசம்பந்தரும் இடக்கி அம்மனும், பங்குனி உத்தரச் சிறப்பு, சிவபாலனின் திருநாமங்கள், அகத்திலே குடியிருக்கும் ஆஞ்சநேயர், கந்தசஷ்டியின் தத்துவம், எங்கும் எதிலும் லிங்கேஸ்வரர், பால் கொடுத்த அம்மையும் மோர் கொடுத்த அப்பனும், ஆடல் வல்லான் அம்பலத்தாடியின் திருநடனம், பக்தனுக்கு பாதை காட்டிய பரமன், ஈதல் அறம், உருத்திராட்சம், கார்த்திகை தீபத்தின் மூலாதாரக் கோவில் திருவண்ணாமலை, கோரிய வரம் தரும் கோமாதாவாகிய காமதேனு ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட அறுபது ஆன்மீகக் கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61149).