வசந்தி கணேசலிங்கம். கண்டி: திருமதி வசந்தி கணேசலிங்கம், 17, 1/1, முல்கம்பொல வீதி, 1வது பதிப்பு, 2017. (கண்டி: கண்டி ஓப்செட் பிரின்டர்ஸ், 947, பேராதனை வீதி).
Vi, 395 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-38186-0-7.
சாயி என் வாழ்வில் வந்த கதை, தென் ஆபிரிக்கா-டர்பனில் நடந்த அற்புதங்கள், ஆபத்பாந்தவனாம் எங்கள் சாயி, பகவானின் நற்செய்தி, கணவரையும் நம்பவைத்த அதிசயம், பகவானின் நற்செய்தி முதலான 54 தலைப்புகளில் பகவான் சத்திய சாயிபாபா அவர்கள் தொடர்பான அனுபவங்களைப் பிரதானமாக இந்நூல் பதிவுசெய்கின்றது. பின்னிணைப்புகளாக தோத்திரங்கள் படிப்பதால் ஏற்படும் பயன்கள், என்ற கட்டுரையும், விநாயகர் பிரார்த்தனை, குரு பிரார்த்தனை, பகவான் ஸ்ரீ சத்யசாயி சுப்ரபாதம், பகவான் ஸ்ரீ சத்யசாயி அஷ்டோத்திரம், பகவான் ஸ்ரீ சத்யசாயி பஞ்சரத்ன தோத்திரம், பகவான் ஸ்ரீ சத்யசாயி நவரத்தின மாலை, பகவான் ஸ்ரீ சத்யசாயி சப்ததி தோத்திரம், ஸ்ரீ காயத்ரி மந்திரம், ஸ்ரீ சத்யசாயி காயத்ரி மந்திரம், ம்ருத்யுஞ்ஜய மந்திரம், சாந்தி சுலோகங்கள், சர்வதர்ம பிரார்த்தனை, மங்கள ஆரத்தி, ஸத்ய ஸாயி கவசம், ஸ்ரீ சீரடி சாயி தோத்திரங்கள், சத்குரு ஸ்ரீ சாயி ஓம், ஸ்ரீ சாயி பவானி, ஸ்ரீ சீரடி சாயி பாபா பாமாலை, ஸ்ரீ தத்தாத்ரேய பாவனி, நாம ஸ்மரணை ஆகிய ஸ்ரீ சத்யசாயியின் தோத்திரங்களின் தொகுப்பும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62117).