சி.கணபதிப்பிள்ளை (மூலம்), ஸ்ரீ பிரசாந்தன், ஏ.அனுசாந்தன் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xvi, 176 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ., ISBN: 978-955-9233-68-8.
கந்தபுராண மகிமை மேன்மைகளையும், அதன்வழியொழுகுவோரின் சிறப்பையும் எடுத்துப் பேசும் கந்தபுராண கலாசாரம் என்னும் இந்நூல், கந்தபுராணப் பெருமை-1, கந்தபுராணப் பெருமை-2, கண்ணூறு, வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை, புராணபடனம், பெறுபேறு, ஏகாத்மவாதம், சைவசித்தாந்த கலாநிதி செந்திநாதையர், செந்திநாதையர் நிறுவிய உண்மை, சூதசங்கிதையில் ஏகாத்மவாதிகளின் விளையாட்டு, கந்தபுராண போதனை-முன்னுரை, சமய வகுப்பு, சமயத்தைப் பற்றிய சில கருத்துக்கள், நூல்களின் ஒருமையும் பிறழ்வும், சமயங்கள், வைதிக சைவம், புறச் சமயங்கள், சூரபன்மன், அறம் பொருள், இன்பம், களவு கற்பு, கந்தபுராண சமுத்திரம், தோத்திரம் ஆகிய தலைப்புகளின்கீழ் இவை எழுதப்பட்டுள்ளன. பரமேஸ்வராக் கல்லூரியில் நடந்த லக்ஷிய ஜயந்தி நிகழ்வொன்றில் ‘யாழ்ப்பாணக் கலாச்சார மூலம்-கந்தபுராணம்’ என்ற தலையங்கத்தில் நிகழ்த்திய ஒரு பிரசங்கத்தின் விரிவு இந்நூலாகும்.