ஆறுமுக நாவலர் (உரையாசிரியர்), பொன்னம்பலபிள்ளை (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்துப் பண்பாட்டு நிதியம், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2017.(கொழும்பு 6: விகடன் அச்சகம், 541/2 சீ, காலி வீதி, வெள்ளவத்தை).
xxiii, 693 பக்கம், விலை: ரூபா 1500., அளவு: 26×18 சமீ., ISBN: 978-955-9233-48-0.
சமஸ்கிருதத்திலிருந்து கச்சியப்ப சிவாச்சாரியாரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கந்தபுராணத்திற்கான எளிமையான உரையாக ஆறுமுகநாவலரால் எழுதப்பட்ட ‘கந்தபுராண வசனம்’ அமைந்துள்ளது. அவருக்குப் பின்னர் ஆறுமுக நாவலர் சபை 1981 ஆம் ஆண்டில் அந்த நூலைப் பதிப்பித்திருந்தது. அதனைத் தொடர்ந்து 35 ஆண்டுகளின் பின்னர் சைவப்பிரகாச பதிப்பகத்தின் முயற்சியால் இந்து சமய கலாசார அலுவலகள் திணைக்களத்தால் இந்த நூல் பதிப்பித்து வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62108).