ஆறுமுக நாவலர் (பதிப்பாசிரியர்). சிதம்பரம்: பொன்னம்பலபிள்ளை, தருமபரிபாலகர், சைவப்பிரகாச வித்தியாசாலை, 5வது பதிப்பு வைகாசி 1912. (சென்னபட்டணம்: வித்தியாநுபாலன யந்திரசாலை).
440 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×15.5 சமீ.
சுப்பிரமணிய சுவாமி வரப்பிரசாதியாயும் குமரகோட்டத்து அர்ச்சகராயும் காஞ்சீபுரத்தில் எழுந்தருளியிருந்த கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் அருளிச்செய்த கந்தபுராணத்திற்கு யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரவர்கள் பல பிரதிரூபங்களையும் பரிசோதித்து தான் தாபித்த சிதம்பரம் சைவப்பிரகாசவித்தியாசாலையின் தர்மபரிபாலகர் பொன்னம்பலபிள்ளை அவர்களின் மூலம் வெளியிட்டு வைத்திருந்த கந்தபுராணத்தின் ஐந்தாவது பதிப்பு இதுவாகும். பரிதாபி ஆண்டின் வைகாசி மாதத்தில் இப்பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34140).