கச்சியப்ப சிவாச்சாரியார் (மூலம்), ச.சுப்பிரமணிய சாஸ்திரிகள் (உரையாசிரியர்), தி.செல்வமனோகரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, மீள்பதிப்பு, ஓகஸ்ட் 2018, 1வது பதிப்பு, 1909. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
xiv, 666 பக்கம், விலை: ரூபா 550., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-9233-58-9.
கந்தபுராணக் காப்பியத்தில் இடம்பெற்றுள்ள ஆறு காண்டங்களில் இரண்டாவது காண்டமாகத் திகழ்வது அசுர காண்டமாகும். இக்காண்டம் மாயைப் படலத்திலிருந்து அமரர் சிறைபுகு படலம் ஈறாக 43 படலங்களைக் கொண்டமைந்துள்ளது. இப்புராணத்தில் அதிக படலங்களையும் பாடல்களையும் கொண்ட காண்டமும் இதுவாகும். அசுரர், அவர்தம் இயல்பு, சூரபன்மன் முதலானோரின் செயல்கள், அரசு, அரசாட்சி, இந்திரன் முதலான தேவர்களின் துயர் என்பவற்றை இக்காண்டம் விபரித்து நிற்கின்றது. யாழ்ப்பாணம், பருத்தித்துறை, தும்பைநகர் ச.சுப்பிரமணிய சாஸ்திரிகள் எழுதிய இந்நூல் 1909இல் முதற்பதிப்பினைக் கண்டது. 2018இல் மலேசிய திருமுருகன் திருவாக்கு திருபீடத்தின் நான்காவது அனைத்துலக முருகபக்தி மாநாட்டினையொட்டி கொழும்பில் அச்சுருவில் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், பருத்தித்துறை பிரமஸ்ரீ ச.சுப்பிரமணிய சாஸ்திரிகள் இயற்றிய உரை பலராலும் பாராட்டப்பட்டது.