ச.சுப்பிரமணிய சாஸ்திரிகள் (உரையாசிரியர்), தி.செல்வமனோகரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, மீள்பதிப்பு, 2018, 1வது பதிப்பு, 1929. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
xiv, 396 பக்கம், விலை: ரூபா 1000., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-9233-57-2.
ஸ்ரீ கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் அருளிச்செய்த கந்தபுராணம் மூன்றாவது காண்டமான மகேந்திர காண்டம் சம்ஸ்கிருத திராவிட பண்டிதரும் பிரபல சோதிட கணித சித்தாந்தியும் வித்தியாவிருத்தித் தருமகர்த்தருமாகிய யாழ்ப்பாணம், பருத்தித்துறை பிரம்மஸ்ரீ ச.சுப்பிரமணிய சாஸ்திரிகள் இயற்றிய உரையுடன் கூடியதாக 1929இல் 13ஆவது தருமாலய வெளியீடாக கலாநிதி யந்திரசாலையில் அச்சிடப்பெற்று வெளிவந்துள்ளது. இதன் மீளச்சு 2018இல் மலேசிய திருமுருகன் திருவாக்கு திருபீடத்தின் நான்காவது அனைத்துலக முருகபக்தி மாநாட்டினையொட்டி கொழும்பில் வெளிவந்துள்ளது.