ஆறுமுக நாவலர் (பதிப்பாசிரியர்), ச.வயித்தியலிங்கபிள்ளை (உரையாசிரியர்). கனடா: கனடா வல்வை வரலாற்று ஆவணக் காப்பகம், மீள்பதிப்பு, ஒக்டோபர் 2010, 2வது பதிப்பு, 1955. (கனடா: விவேகா அச்சகம்).
(14), 214 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.
கந்தபுராணத்தின் மிக முக்கியமான படலமாகக் கருதப்படும் வள்ளியம்மை திருமணப்படலம் பாடல்களுக்குரிய பொருள் விளக்கத்தோடு நூல்வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. முருகப்பெருமான் வள்ளியை மணம்புரிந்த வரலாற்றை இப்புராணப்பகுதி விதந்துரைக்கின்றது. சிவமுனிவனான திருமாலுக்கும் மானுருக்கொண்ட திருமகளுக்கும் பிறந்த வள்ளி, வேடுவத் தலைவனான நம்பியரசனால் வளர்க்கப்பட்டவள். பின்னர் கிழவுருத் தாங்கி வந்த முருகன் வள்ளியைத் திருமணஞ் செய்தான் என்கின்றது புராணம். வல்வை இயற்றமிழ்ப் போதகாசிரியர் ச.வயித்தியலிங்கபிள்ளை அவர்களின் உரையுடன் இது யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர் அவர்களால் பதிப்பிக்கப்பெற்று சிதம்பர சைவப்பிரகாச வித்தியாசாலைத் தருமபரிபாலகர் ச.பொன்னுஸ்வாமி அவர்களால் சென்னை வித்தியாநுபாலன யந்திரசாலையில் வைகாசி 1955இல் (மன்மத வருடம்)அச்சிடப்பட்ட இரண்டாவது பதிப்பின் மீள்பதிப்பாகும்.
கந்தபுராணம்: வள்ளியம்மை திருமணப்படலம்.
ச.வயித்தியலிங்கபிள்ளை (உரையாசிரியர்), தி.செல்வமனோகரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, மீள்பதிப்பு, 2018, 2வது பதிப்பு, 1955. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
xviii, 216 பக்கம், விலை: ரூபா 575., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-9233-60-2.
கந்தபுராணத்தின் மிக முக்கியமான படலமாகக் கருதப்படும் வள்ளியம்மை திருமணப்படலம் பாடல்களுக்குரிய பொருள் விளக்கத்தோடு நூல்வடிவில் திணைக்களத்தின் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. 1869இல் ஆறுமுக நாவலரால் முதலில் கந்தபுராணம் 10346 பாடல்களுடன் ஏட்டுச்சுவடியிலிருந்து நூலுருவில் அச்சிடப்பட்டதென்பது வரலாறு. இந்நூலின் உரையாசிரியர் ச.வயித்தியலிங்கபிள்ளை 1843ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையில் பிறந்தவர். இதன் மீளச்சு 2018இல் மலேசிய திருமுருகன் திருவாக்கு திருபீடத்தின் நான்காவது அனைத்துலக முருகபக்தி மாநாட்டினையொட்டி கொழும்பில் வெளிவந்துள்ளது.