சரண்யா சிவஞானப்பிரகாசம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: அமரர் அம்பலவாணர் தம்பிஐயா குடும்பத்தினர், ‘குகநிதி’, கைதடி வடக்கு, கைதடி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1992. (அச்சக விபரம் தரப்படவில்லை).
viii, 116 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.
யாழ் கைதடி வாசியும் பொலந்நறுவை – கதுருவெல லட்சுமி ஸ்டோர்ஸ், கைதடி-நாவற்குழி சிவா அரிசி ஆலை ஆகியவற்றின் உரிமையாளரும், சிறந்த முருகபக்தருமான பிரபல வர்த்தகர் அமரர் முருகேசு அம்பலவாணர் தம்பிஐயா (22.12.1927-27.8.1991) அவர்களின் மறைவின் ஓராண்டுப் பூர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பெற்ற சிறப்பு மலர் இது. இதில் பிள்ளையார் பஜனை, விநாயகர் அகவல், விநாயகர் கவசம், கந்தர் சஷ்டி கவசம், கந்தர் அநுபூதி, சண்முக கவசம், முருகன் துதி, திருப்புகழ், திருமுறைகள் எனப் பல்வேறு பக்தி இலக்கியங்கள் தேர்ந்து தொகுக்கப்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39091).