13224 சம்பந்தரும் அப்பரும் சுந்தரரும் அருளிய அற்புதத் திருப்பதிகங்கள்.

சி.அப்புத்துரை. காரைநகர்: மணிவாசகர் மடாலய அன்னதான சபை, 1வது பதிப்பு, ஜுலை 2008. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).

viii, 254 பக்கம், தகடுகள், சித்திரங்கள், விலை: ரூபா 300., அளவு: 20.5×14 சமீ.

சுவாமிநாத பண்டிதர், பண்டிதர் தி.பொன்னம்பலவாணர், பண்டிதர் வ.பேரின்பநாயகம் ஆகியோரின் பதிக விளக்கத்துடன் கூடிய இத்திருப்பதிகங்கள் தொகுக்கப்பெற்று ஈழத்துச் சிதம்பரத்தில் நடராசர் பிரதிட்டை செய்த நூறாவது ஆண்டு நிறைவுநாள் வெளியீடாக 09.07.2008 அன்று வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50470).

ஏனைய பதிவுகள்