ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், கந்தசாமி கோவிலடி, இணுவில், சுன்னாகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2006. (சுன்னாகம்: ஸ்ரீவித்யா கணிணி அச்சகம், இணுவில், யாழ்ப்பாணம்: மீனாட்சி அச்சகம், நல்லூர்).
40 பக்கம், விளக்கச் சித்திரங்கள், விலை: ரூபா 50., அளவு: 20.5×14.5 சமீ.
புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியின் பழைய மாணவரான கோப்பாய் சிவம் அவர்கள் மேற்படி பாடசாலையின் பவளவிழா நினைவாக 10.09.2006 அன்று இந்நூலை வெளியிட்டிருந்தார். இந்நூலிலுள்ள நற்சிந்தனைகளிற் சில எழுபதுகளில் இலங்கை வானொலியில் ஒலிபரப்பானவை. ஏனையவை இலங்கையில் நடைபெற்ற இந்துமாநாட்டையொட்டி ‘வலம்புரி’ பத்திரிகையில் வெளியானவை. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24928).