மு.தியாகராசா (தொகுப்பாசிரியர்). கொழும்பு: கொழும்புச் சிவத்திரு மன்றம், 32B, ஸ்ரீ சுமங்கல வீதி, இரத்மலானை, 1வது பதிப்பு, டிசம்பர் 2007. (கொழும்பு 6: டெக்னோ பிரின்ட், 55 டாக்டர் ஈ.ஏ. குரே மாவத்தை).
56 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு: 21.5×14.5 சமீ.
திருநாவுக்கரசு நாயனாரின் நான்காம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகளில் உள்ள அறுபது பாசுரங்களைத் தேர்ந்து விளக்கமான உரையுடன் இந்நூலில் தொகுத்துத் தந்துள்ளனர். உரையை விளங்கிப் பாடல்களைப் பாடும்போது எமக்கு அப்பர் சுவாமிகளின் பக்திப் பெருக்கின் உணர்வுகளை அறிந்து அனுபவிக்கும் பேறு கிட்டுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48426).