சுந்தரம் தர்மலிங்கம் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சுந்தரம் தர்மலிங்கம், பொற்பதி வீதி, கோண்டாவில், 1வது பதிப்பு, ஜனவரி 2018. (கொழும்பு 6: Hookup plus, 2, 1/1 A, நெல்சன் பிளேஸ், வெள்ளவத்தை).
134 பக்கம், சித்திரங்கள், விலை: அன்பளிப்பு, அளவு: 20.5×14 சமீ.
திருமந்திரம் தமிழ் ஆகம நூல் என்று அழைக்கப்படுகிறது. இந்நூலுக்கு திருமூலர் திருமந்திர மாலை என்று பெயரிட்டுள்ளார். இதனை தமிழ் மூவாயிரம் என்றும் அழைக்கின்றனர். திருமந்திரம் ஒன்பது உட்பிரிவுகளைக் கொண்டது. இந்த உட்பிரிவானது தந்திரம் என்று அழைக்கப்படுகிறது. இதில் 232 அதிகாரங்கள், 3100 செய்யுட்கள் உள்ளன. இத்தகைய சிறப்பு மிக்க திருமூலரின் திருமந்திரத்தை இளம் வாசகர்களுக்கு எளிமையாக அறிமுகம் செய்யும் ஒரு முயற்சியாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.